இடுகைகள்

பிரம்மானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணத்தை தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கை அவலத்தைப் பற்றிய பகடி!

படம்
  மணி  தெலுங்கு  இரண்டு இளைஞர்கள் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். சாப்பிடக்கூட காசில்லை. வீட்டு ஓனரின் மகளை இளைஞர்களின் ஒருவனான போஸ் காதலிக்கிறான். இன்னொருவனான சக்ரி, பக்கத்து வீட்டு தொழிலதிபரின் மனைவியை கடத்தி பணம் கேட்டு மிரட்டினால் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என யோசனை சொல்கிறான். இதன்படி மனைவியை கடத்துகிறார்கள். பணம் கேட்டு போன் செய்தால், கணவர், அவளை கொன்றுவிட்டால் ஒரு லட்சம் என்ன இரண்டு லட்சமே தருகிறேன் என பேசுகிறார். இந்த நேரத்தில் கணவரை விசாரிக்க வரும் போலீஸ், தொழிலதிபர் மனைவியைக் கொன்றதாக அவர் மீது சந்தேகப்படுகிறது. அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் வேலையின்மையால் கடத்திவிட்டோம் என தொழிலதிபர் மனைவியிடம் உண்மையைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு நிலைமை என்னவானது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.  இதில் கூறாத கதை. படத்தில் ரவுடியாக வரும் பிரம்மானந்தம் பாத்திரம். இவர் உள்ளூரில் உள்ள கடைகளில் மிரட்டி காசு பிடுங்கி வாழ்கிறார். இவரிடம் பணம் கடன் வாங்க சக்ரி அவர் சினிமாவில் நடிக்கலாம் என ஆசையை தூண்டிவிட்டு காசு வாங்குகிறான். இதற்குப் பிறகு பிரம்மி, நடிப்பு ஆசையில் மூழ்குகிறார்.இதற்கென

தொழிலதிபரான மனைவி சொத்தை அபகரிக்க திட்டம் போடும் கணவர்!

படம்
  மணி மணி ஜேடி சக்ரவர்த்தி, பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் மணி படத்தின் இரண்டாவது பாகம். இந்த படத்தைப் புரிந்துகொள்ள முதல் பாகத்தை பார்ப்பது நல்லது. இல்லையெனில் முதல் நான்கு நிமிடங்களுக்கு போடும் காட்சிகளைப்பார்த்தால் கூட போதும்தான்.  ஆன்ட்டி ஜெயசுதா நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவரிடம் போஸ், சக்ரவர்த்தி என இருவர் வேலை செய்கிறார்கள். அங்கு புதிதாக ஒரு பெண் வந்து வேலை கேட்கிறார். சக்கரவர்த்தி அவரின் அழகில் மயங்கி வேலைக்கு பரிந்துரை செய்கிறார். அந்த பெண் வந்தது முதலே சக்ரவர்த்தி மீது பிரியமாக இருக்கிறார். ஜெயசுதாவின் சொத்தை அபகரிக்க அவரது கணவர் சுப்பாராவ் முயல்கிறார். அதற்கு ரவுடி ஒருவரை அணுகுகிறார். அவர்தான் அலாவுதீன். சொத்தில் ஐம்பது சதவீதம் எனக்கு கொடுத்தால், ஜெயசுதாவை கொல்வதாக வாக்கு கொடுக்கிறார். இதற்கிடையில், சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வெளியே வருகிறார். இவர், சக்ரவர்த்தியைக் கொல்ல முயல்கிறார். இப்படி பல்வேறுகதைகள் நடக்கின்றன.  படத்தில் நாயகர்கள் என்று சொன்னால் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும். இரண்