அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்
அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் மறைந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் மாதத் தேக்கப்பட் வாசுதேவன் நாயர். சுருக்கமாக எம்டி வாசுதேவன் நாயர். மலபார் மாவட்டத்திலுள்ள பொன்னானி தாலுக்காவின் கூடலூர் கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை பதிமூன்றாம் தேதி பிறந்தார். தந்தை நாராயணன் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். எம்டி, மலபார் மாவட்ட கல்வி வாரியம் நடத்திய பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பாலக்காட்டிலுள்ள எம்பி டுட்டோரியலிலும் கூட வேலை செய்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலுள்ள மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இங்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். எம்டி மூலமாக அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர்களில் புன்னத்தில் குஞ்சப்துல்லா, என்எஸ் மாதவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எம்டி வாசுதேவன் நாயர், தீவிரமான இலக்கிய எழுத்துக்கு சொந்தக்காரர். வளர்த்துமிருகங்கள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அடுத்து வெளியானதுதான் நாலுகெட்டு என்ற நாவல். இந்த நாவலில் நாயர் குடும்பம் ...