இடுகைகள்

மைசூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்த அறிவியல் அமைப்பு! - இந்தியா 75

படம்
  இன்று அறிவியல் அமைப்புகள் அதில் சேர்க்கப்படும் பல்வேறு முட்டாள்களால் உலகளவில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறது. விலங்கின் கழிவுப்பொருளில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது என ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டதால்தான், இந்தியாவின் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது என்பது உண்மை. இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எனும் அமைப்பு தொழில்துறைக்கான பல்வேறு ஊக்கத்தை கண்டுபிடிப்புகளை வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய மண்ணில் வேரூன்ற, இந்த அறிவியல் அமைப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதைப்பற்றித்தான் இங்கே நாம் படிக்கப் போகிறோம்.  இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்குவதற்கான ஐடியாவைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இவர், ஜப்பானில் இருந்து சிகாகோவுக்கு ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், மேற்குலகில் இருக்கும் அறிவியல் அமைப்புகளை போல இந்தியாவில் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். இதற்குப்பிறகுதான் 1898ஆம் ஆண்டு நவ.23 அன்று தனது முடிவை