இடுகைகள்

மாநில பட்டாம்பூச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து!

படம்
  கோவாவின் மாநில பட்டாம்பூச்சி! உடலில் கருப்பு வரிகளைக் கொண்ட பேப்பர்கைட் (paperkite) எனும் பட்டாம்பூச்சியை கோவா  அரசு, மாநில பட்டாம்பூச்சியாக தேர்ந்தெடுத்துள்ளது. இதனை மலபார் ட்ரீ நிம்ப் (malabar tree nymph ) என குறிப்பிடுகிறார்கள் . இதன் செல்லப்பெயர்,  பேப்பர்கைட். கோவாவில் ஐந்தாவது ஆண்டாக பறவைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை கோவாவின் வனத்துறை நடத்தியது. அதில் பங்கேற்ற மாநில முதல்வர்  பிரமோத் சாவந்த், பேப்பர்கைட் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தார்.  பேப்பர்கைட் பட்டாம்பூச்சி, 120 முதல் 154 மி.மி. நீளம் கொண்ட இறகைக் கொண்டது. அழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரி என உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN),தனது பட்டியலில் இதனை அறிவித்துள்ளது. பேப்பர்கைட் பட்டாம்பூச்சி நிம்பாலிடே (Nymphalidae)எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.   அழியும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக கோவா அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்பட்டாம்பூச்சியின் வாழிடம் பாதுகாக்கப்படும் முயற்சிகள் தொடங்கும் வாய்ப்புள்ளது. வனத்துறை உருவாக்கிய குழுவில் சூழல் வல்லுநர்கள் பலர் இடம்பெற்