இடுகைகள்

வாழ்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

படம்
  எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர் டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார். இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது. இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு செல்ல

உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன?

படம்
                    உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன ? உலகில் 8.7 மில்லியன் உயிரினங்கள் பல்வேறு விதமான சூழல்களில் வாழ்ந்து வருகின்றன . உலகில் உயிரினங்கள் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான முக்கியமான காரணங்கள் என்னவென்று தெரியுமா ? உணவு , நீர் , இருப்பிடம் , வெப்பநிலை , வெளிச்சம் . வெப்பநிலை என்பது அடிக்கடி மாறினால் உயிரினங்கள் வாழ்வது சிக்கலாகிவிடும் . ஆனால் இதெல்லாம் தாண்டி இருட் படர்ந்த குகைகளில் உயிரினங்கள் வாழ்கின்றன . காற்று சுற்றுப்புறத்திலுள்ள காற்று முக்கியமானது . இதனை உயிரினங்கள் சுவாசித்துத்தான் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது . இதனை ரெஸ்பிரேஷன் என்று குறிப்பிடுகின்றனர் . வெப்பம் இதனை ஒளி , வெப்பம் என இருவகையில் கூறலாம் . குறிப்பிட்ட வெப்பநிலை அப்படியே தொடரவேண்டும் . அப்படி இல்லாதபோது உயிரினங்கள் வாழ்க்கை நிலையாக தொடர்வது கடினம் . இருப்பிடம் இருப்பிடம் என்பது உயிரினங்கள் ஓய்வெடுப்பதற்கும் , பிற எதிரி விலங்குகளிடமிருந்து ஓய்வெடுக்கவும்தான் . இப்படி இடம் இல்லாதபோது , உயிரினங்கள் எளிதாக வேட்டையாடப்பட வாய்ப்புள்ளது . உணவு