இடுகைகள்

கமலாநேரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை!

படம்
நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை! இந்தியாவின் முதல் பிரதமராக பணியாற்றிய நேரு, கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர். தினசரி பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் உழைத்தவர். நாட்டின் பிரதமராகவும், வெளியுறவுக்கொள்கை அமைச்சராகவும் இருந்தார். இவரின் அரசியல் வாழ்வு அளவுக்கு, இவரின் திருமண வாழ்வு அதிகளவு குறிப்பிடப்படவில்லை. நேரு, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரில் படித்து வந்தார். தந்தை மோதிலால் நேருவுக்கு அவரை ஆங்கிலேயே அரசில் ஐசிஎஸ் அதிகாரியாக வேலைசெய்ய வைக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் நேரு படிக்கும் காலத்திலேயே உலக அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ஐசிஎஸ் அதிகாரியாக தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்களை அவர் பெற்றிருக்கவில்லை. ஆங்கில அரசில் பணிபுரியும் எண்ணமும் அவருக்குக் கிடையாது. விருப்பமற்ற திருமணம் அந்த கால நடைமுறைப்படி நேருவுக்கு திருமணம் செய்வதற்கான பேச்சு தொடங்கியது. இதுகுறித்து தன் தாய்க்கு 1907 ஆம் ஆண்டு நேரு கடிதம் எழுதினார். ”திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால்