இடுகைகள்

திட்டம் கணக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளும் அதன் கணக்கிடும் திறன்களும்!

படம்
            விலங்குகளும் அவற்றின் திறன்களும் சிங்கம் தனக்கென கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதில் சிறப்பு பெற்றவை . ஆனால் அதன் எண்ணிக்கை கூடாமல் இருப்பது அதன் பலம் . ஒற்றுமையாக இருப்பதால் , எளிதாக இரையை வேட்டையாட முடியும் . கூடவே தனது எல்லையை எளிதாக பாதுகாக்க முடியும் . ஒரு தனி சிங்கம் 259 சதுர கிலோமீட்டர் தூரத்தை தனது கோட்டையாக பாவித்து காப்பாற்றி வாழும் . இதன் எல்லை மாறிக்கொண்டே இருக்கும் . கூட்டமாக இருப்பதால் பிற சிங்க கூட்டத்தின் தாக்குதலை எளிதாக சமாளிக்க முடியும் . மேலும் சண்டையில் பிற எதிரி கூட்டங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு தாக்குதலை நடத்துகிறது . ராணித்தேனீயை மையமாக கொண்ட தேனீக்களின் காலனி எப்போதும் ஆச்சரியப்படுத்துகிற செய்திதான் . நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும் , ஆயிரக்கணக்கான பெண் தேனீக்களும் வாழ்வதற்காக கடுமையாக உழைக்கின்றன . இவை பிற தேனீக்களுடன் தொடர்புகொள்ள குறிப்பிட்ட திசை நோக்கி நடனம் ஆடுகின்றன . குறிப்பிட்ட திசை நோக்கி பறக்கின்றன . இப்படி பறக்கும் விதத்தில் பூக்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்ற தகவலையும் வெளிப்படுத்துகின்