நூறு நாட்கள் சாதாரண மனிதராக வாழ முற்படும் பெரும் பணக்கார வாரிசு!
புருஷோத்தமுடு தெலுங்கு ராஜ்தருண், ஹாசினி சுதீர் உன்னால் முடியும் தம்பி என்ற தமிழ்படத்தினுடைய கதையைப் போன்றதுதான். அதை தெலுங்கு கரம் மசாலா சேர்த்து எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல வீணடித்திருக்கிறார்கள். ராஜ்தருண், கார்ப்பரேட் நிறுவனத்துடைய அடுத்த இயக்குநராக வரக்கூடியவர். ஆனால், நிறுவனரின் விதி ஒன்று உள்ளது.அதாவது அடுத்த இயக்குநராக வரக்கூடியவர், நூறு நாட்களுக்கு தன்னுடைய அடையாளங்களை மறைத்து சாதாரண மனிதராக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்து நூறு நாட்களை முடித்தால் மட்டுமே அவர், நிறுவனத்தின் இயக்குநராக முடியும். ராஜ்தருண் இந்த சோதனையை ஏற்றுக்கொள்கிறார். அதில் வென்றாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி. நிறுவனரின் விதியைப் பற்றி பார்ப்போம். நிறுவனம் லாபகரமாக இயங்குவது முக்கியம். அதேசமயம், லாபத்திற்காக ஒருவர் மனதிலுள்ள கருணையை மனிதர்கள் மீதான மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. அதைத்தான் நிறுவனர், தனது வம்சாவளியிடம் எதிர்பார்க்கிறார். அப்படியான மனம் கொண்டவன்தான் நிறுவனத்தை சரியான பாதையில் நடத்த முடியும் என நம்பி அப்படியான வினோத விதியை ஏற்படுத்துகிறார். படத்தில் ராமு பாத்திரத்தில...