ஹோமியோபதிக்கும் அலோபதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஹோமியோபதிக்கும் அலோபதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? அலோபதி, வேதியியலை அடிப்படையாக கொண்டது. இதில், நோயின் அறிகுறிகளை அழுத்த பல்வேறு வேதி சேர்மானங்கள் உதவுகின்றன. ஹோமியோபதி, இயற்பியலை அடிப்படையாக கொண்டது. ஆற்றல் கொண்ட மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகள் சித்த மருத்துவம் போலவே தாவரம், விலங்கு, கனிமங்களிலிருந்து பெறப்படுகிறது. அலோபதி நோய் அறிகுறிகளை உடலுக்குள் அழுத்துகிறது என்றால், ஹோமியோபதி அதை முற்றாக அழிக்க தீர்க்க முயல்கிறது. ஹோமியோபதியில் உள்ள மருந்துகளின் பக்கவிளைவுகள் என்னென்ன? ஆயுர்வேத மருந்துகளில் நேரடி விளைவு நோய் குணமாவது என்றால், அதை உண்ணும்போது வேறு பாதக விளைவுகளும் ஏற்படும் என மறைந்துவிட்ட மருத்துவர் எல் மகாதேவன் கூறியுள்ளார். அலோபதியில் கொடுக்கப்படும் மருந்துகள் கல்லீரலுக்கு செல்கின்றன. அங்கிருந்து பாதிக்கப்பட்ட உடல் பகுதிக்கு சென்று அறிகுறிகளை தீர்க்கிறது. ஹோமியோபதி நரம்பு மண்டலத்திற்கு சென்று சேர்கிறது. இப்படி நோய்க்கு குணம் வருகிறது. ஹோமியோபதியில், எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுகிறீர்களோ அந்த நோய் பலமடங...