இடுகைகள்

இளம்வயது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித உடல் உறுப்புகளில் கையுறை! மிரட்டிய எட் ஜீன்

படம்
அசுர குலம் எட் ஜீன் 1950களில் எட் ஜீன் பற்றி உலகம் அறிந்தது. இவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சைக்கோ என்ற நாவலை ராபர்ட் பிலோச் என்பவர் எழுதினார். இதைத்தான் ஹிட்சாக் சைக்கோ என்ற பெயரில் படமாக்கினார். ஜீன், தன் இறந்துபோன அம்மாவை அப்படியே பாடம் பண்ணி வைத்திருந்தார். இன்னும் பல பகீர்களை அவரது வீட்டில் போலீசார் பார்த்தாக கூறுகிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம். ஜீனை போலீசார் வளைத்து பிடித்தபோது, அவர் வைத்திருந்த பொருட்களை வித்தியாசமாக பார்த்தனர். அதில் ஓர் வித்தியாசம் தெரிந்தது. கையுறைகள், நாற்காலிகள், விளக்கு மூடிகள் என அனைத்தும் மனிதர்களின் உடல் உறுப்புகளாலேயே செய்தவை. பின்னே கொன்ற மனிதர்களை புதைத்தால்தானே நாய்களை வைத்து கண்டுபிடிப்பீர்கள்? இந்த  குணத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஜீனின் இளமைப்பருவ குளறுபடிகள்தான். 1906ஆம்ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்தவர், ஜீன். ஜார்ஜ் - அகஸ்டா என்ற இவரது தந்தையும் தாயும் எப்படி திருமணம் செய்தார்களோ? எந்த விஷயத்திலும் பொருந்தாத ஜோடி. எப்போதும் ஸ்காட்சும் கையுமாக இருப்பவர் அப்பா என்றா

கற்பனையான நண்பர் ஆபத்தை ஏற்படுத்துவாரா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி என் மகன் கற்பனையாக ஓர் நண்பனை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறான். இது ஆபத்தானதா? அவன் சிறுவனாக இருக்கும்வரையில் அப்படி விளையாடுவது எந்த ஆபத்தையும் தராது. தனக்கான நண்பராக ஒருவரை கற்பனை செய்து விளையாடுவது சிறுவயதில் அவனின் மொழிவளர்ச்சிக்கு உதவும். அதனால் இம்முயற்சிகளை தடுக்காதீர்கள். அதேசமயம் இதே தன்மை வளர்ந்து வரும்போது குறையும். குறைய வேண்டும். அப்படி இல்லாதபோது நீங்கள் கவனிப்பது அவசியம். மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுமளவு இது முக்கியமான விஷயம் அல்ல. நன்றி - பிபிசி 

சீரியல் கொலைகாரர்களுக்கான வரையறை!

படம்
unspalsh.com அசுரகுலம் ரத்த தடங்களைத் தேடி சீரியல் கொலைகார ர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன தொடர்பு என முதலில் நாம் தெளிவாக வேண்டும். குடும்பத்திலுள்ள உள்ளவர், தன்னுடைய ரத்த சொந்தத்தைக் கொல்கிறார். என்ன காரணம், சொத்து என போலீஸ் முடிவு செய்து உள்வட்ட விசாரணையில் கேசை மூடிவிடும். ஆனால் சைக்கோ கொலைகாரர்கள் விஷயத்தில் யோசிப்பதே வேறுவிதமாக இருக்கவேண்டும். அமெரிக்க அரசின் எஃப்பிஐ, சீரியல் கொலைகார ர்களுக்கு மூன்று கொலைகள் செய்யவேண்டும் என்ற வரையறையை வைத்திருக்கிறது. இன்று அவை மாறிவிட்டன என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று கொலைகள்  என்பது சீரியல் கொலைக்காரர் என அடையாளப்படுத்துவதற்கான முதல் பாய்ன்ட். பின்னர் கொலை எப்படி நடந்தது, பாலியல் வல்லுறவு, சித்திரவதை ஆகியவை இதில் சேர்க்கப்பட்டன. அமெரிக்காவில் இப்போது இனவெறி தூண்டுதலாக துப்பாக்கியை எடுத்து பள்ளிகளிலோ, தியேட்டர்களிலோ சென்று சுடும் பழக்கம் இருக்கிறது. அதனை திரள் கொலைகள் என வகைப்படுத்தலாம். இதில் சீரியல் கொலை என்ற பதம் உதவாது. ஒருவருக்கு மனநலம் பாதித்து அதன் விளைவாக நிறையப் பேரை கொல்கிறார். தனக்கு சரியான சமயத்தில் உதவாத