இடுகைகள்

புத்தக விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை மக்களின் வாழ்நிலையும், பொருளாதாரமும் - அபிஜித், எஸ்தர் டஃப்லோ

படம்
புத்தக வாசிப்பு புவர் எகனாமிக்ஸ் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ ப.320 வெளியீடு 2011 இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஐந்தாண்டு காலத்திற்குள், சில அரசுகள் மட்டுமே காகிதத்தில் மசோதாவாக இருக்கும் திட்டங்கள் மக்களுக்கு பயன்படும்படி யோசிக்கின்றன. ஏன் சில திட்டங்கள் மட்டும் சிறப்பான பயன்களைத் தருகின்றன, நிலப்பரப்பு ரீதியாக என்ன பிரச்னைகளை இருக்கின்றன, உணவை விட மக்கள் பொழுதுபோக்குக்கு செலவிட தயாராக இருப்பது ஏன்? வறுமை என்ற நிலை தொடர்ச்சியாக மாறாமல் இருப்பது எப்படி, அரசு உண்மையில் இதற்காக உழைக்கிறதா? அரசு அமைப்புகளின் ஊராட்சி பங்களிப்பு மக்களுக்கு உதவுகிறதா என பல்வேறு கேள்விகளை அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ இந்த நூலில் எழுப்பியிருக்கிறார்கள். அரசு வேலைதான் என அலட்சியமாக காலையில் எட்டு மணிக்கு வரவேண்டிய வேலைக்கு பத்து மணிக்கு வருவது என மருத்துவப் பணியாளர்கள்  உதய்பூரில் வேலை செய்கின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் அரசு சுகாதார நிலையத்திற்கு வருவதே இல்லை. பெண் பணியாளர்கள் எப்போது வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத நில

பாதி சிங்கம் பாதி நரி கால்வாசி எலி - நரசிம்மராவின் கதை!

படம்
open நரசிம்மராவ் வினய் சீத்தாபதி தமிழில் - ஜெ.ராம்கி கிழக்கு பம்மலப்பட்டி வெங்கட நரசிம்மராவ், இந்திய அரசியலில் இன்று மறக்கப்பட்ட முகம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள், நினைவுநாள் என எதிலும் பங்குகொள்வதில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர காங்கிரஸ் முகங்கள் யாரையும் நினைவஞ்சலியில் பார்க்க முடியாது. அரசியலில் சிங்கத்திற்கு வைக்கப்பட்ட பொறிகளை நரியாக கண்டுபிடித்து, முற்றுகையிடும் ஓநாய்களை சிங்கமாக மாறி விரட்டி ஆட்சி செய்த பிரதமர். ஆந்திராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, வசதியாக வாழ்ந்தவர். குடும்பத்தில் அதிக மொழிகள் கற்ற புத்திசாலி. ஆங்கிலம் கற்பதற்கு முன்பே ஐந்து மொழிகள் கற்றவர். இவர் மீதான குற்றச்சாட்டாக பாபர் மசூதி இடிப்பு கூறப்படுகிறது. அக்காலகட்ட நிகழ்ச்சிகளை நேர்த்தியாக வினய் சீத்தாபதி பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ராவ் நேர்மையானவர். ஆனால், நேர்மையாக அரசியல் செய்தவரல்ல என்ற வரி போதும். ராவ் அரசியலில் குதிரை பேரங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலில் சூட்கேஸ் வாங்கிய குற்றச்சாட்டு ராவ் மீது களங்கத்

மனிதர்களின் உதவியின்றி பூத்துக்குலுங்கும் காகித மலர்கள்! - ஆதவன்

படம்
pinterest காகித மலர்கள் ஆதவன் உயிர்மை ரூ.190  தாராளமய உலகிலும் பொருந்தும் கதை என்பது ஆதவனின் எழுத்துச் சிறப்பு. நிறையப்பேருக்கு இந்த நாவல் பிடிக்காமல் போகலாம். காரணம், இது இன்றைய நான்லீனியர் சினிமா போல கட் செய்து ஜம்ப்பாகி கதை செல்கிறது. குறிப்பாக இறுதிப்பகுதியை எட்டும்போது. பக்கம் 300க்கும் மேல் கதை சொல்லும் வடிவமே, ஒருவர் பேசி முடிக்கும் வார்த்தைக்கு,  மற்றொரு கதாபாத்திரத்தின் பதில் கூறுவதாக அடுத்த கதை தொடங்கும். இரண்டும் வேறுவேறு என்பதால் கவனமாக நீங்கள் படிக்கவேண்டியிருக்கும். ரைட். காகித மலர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என எழுதப்பட்டபோதே பஞ்சாயத்து நடந்திருக்கிறது. நாம் இக்கதையில் வரும் பசுபதி, மிஸஸ் பசுபதி, விசுவம், செல்லப்பா, பத்ரி, கணேசன், தாரா, பத்மினி என யாரை வேண்டுமானாலும் காகித மலர்கள் என்று  வைத்துக்கொள்ளலாம். ஆசிரியர் இதனை வேரற்ற என்று கூட சொல்லலாம் என்கிறார். அத்தனை வாய்ப்புகளும் இதில் உள்ளன. ஆனால், கதையில் இக்கதாபாத்திரங்களை மிக இயல்பாக சித்தரித்தது கதையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் படிக்கலாம் என்று சொல்ல வைக்கிறது. அரசு பணியில்

ஆட்டிசக்குழந்தைகளுக்கான வழிகாட்டல்! - எழுதாப் பயணம்

படம்
புத்தக விமர்சனம்! எழுதாப்பயணம் லஷ்மி பாலகிருஷ்ணன் கனி புக்ஸ்  ரூ.100 இந்த நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல். காரணம் பேசியுள்ள பொருள் ஆட்டிசம் தொடர்பானது என்பதால்தான்.  சாதாரணமாக ஆட்டிசம் என்பதை பொதுப்படையாக ஒருவர் பேசுவதையும், அதற்கான தீர்வுகளை முன்வைப்பதும் எளிது. காரணம், இந்த விஷயத்தை அவர் மூன்றாவது நபராகத்தான் பார்க்கிறார். ஆனால் அதே பிரச்னையை அவர் தினசரி சந்திப்பவராக இருந்தால் எப்படியிருக்கும்? இடதுசாரி சிந்தனையாளரான குழந்தை இலக்கிய எழுத்தாளரான பாலபாரதி (பாலகிருஷ்ணன்) தினசரி சந்தித்துக்கொண்டிருப்பது இத்தகைய சூழ்நிலையைத்தான். அவரின் பிள்ளை கனிவமுதன் ஆட்டிசக்குழந்தை.  பாலகிருஷ்ணனின் மனைவி லஷ்மி இந்த நூலை, ஒரு தாயாக இருந்து எழுதியுள்ளது இதன் சிறப்பம்சம். ஆட்டிசம் என்பதை என்னவென்றே தெரியாமல் உள்ளவர்கள் அநேகம்பேர். இதற்கான பள்ளிகள் இன்று மெல்ல உருவாகி வளர்ந்து வருகின்றன. இக்குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை ஏராளமான டிகிரிகளை தங்கள் பெயரின் பின்னால் கொண்டவர்கள் கூட அறிந்திருப்பதில்லை.  அதைத்தான் இந்த நூலில் லஷ்மி மிக அழுத்தமாக கோடிட்டு கா

சிரியாவில் செயல்பட்ட ரகசிய நூலகம்!

படம்
டீன் வோக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எப்படி தன் வாழ்க்கையில் தன் ஆசைகளைத்துரத்தி வென்றார் என்பதே நூலின் மையம். கருப்பின அம்மா, ஐரிஷ் கத்தோலிக்க அப்பா இருவரின் காதல் பரிசாக பிறந்தார். பள்ளியில் நண்பர்கள் கிடைக்காமல் அல்லாடி தன் ஆசிரியர் மூலம் ஊக்கம் பெற்று பத்திரிகை பாதையைத் தேர்ந்தெடுத்து வென்ற கதை ஊக்கமூட்டுகிறது. எபோனி, தி வோக், டீன் வோக் என பத்திரிகைகளில் பெற்ற அனுபவங்கள் உங்களுக்கு உதவக்கூடும். தீவிரவாதக்குழுக்களைப் படித்திருப்பீர்கள். புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  அதிலும் பெண்களே உறுப்பினர்களாக இருந்து, பெண்ணே கேங் லீடராக இருந்து வழிநடத்தினால் எப்படி இருக்கும்? 1978-85 காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வில்லியம் விரட்டிப்பிடித்த கம்யூனிச தீவிரவாத அமைப்பு பற்றிய நிகழ்வுகளை இந்த நூல் கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்க்கும் சாம பேத தண்ட அமைப்பு இது. நவ.7, 1983 அன்று அமெரிக்க தலைநகரில் வெடிகுண்டு வைக்கும் தீவிரத்துடன் இருந்த அமைப்பு வங்கிக் கொள்ளைகளிலும் தொடர்புடையது. எப்படி வில்லியம் இந்த அமைப்பின் நடவடிக

நாசிப்படையினரின் கொடூரத்தை உலகிற்கு சொன்னவர்!

படம்
புத்தக விமர்சனம் அறமே வாழ்க்கை! அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் தொடங்கி ஆசான் ஜெயமோகன் வரையில் அறம் பற்றி பேசாத ஆன்மாக்கள் உலகில் கிடையாது. தந்தியில் நீங்கள் படிக்கும் சாணக்கியன் சொல் கூட இதேவகையான அறத்தை அரசரின் வழியில் சொல்லி வருகிறது. இந்த அறம் என்பது எப்படி தலைமுறைகள் வழியாக நமக்கு வந்திருக்கிறது என்பதை விளக்குகிறார் இந்த நூல் ஆசிரியர். மாறும் பணிச்சூழல் இன்று நாம் தேடும் கூகுள் முதற்கொண்டு ஏ.ஐ.தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. பாருங்கள் இந்த வரிகளைக்கூட நான் தட்டச்சு செய்யவேண்டியதில்லை. இந்த வார்த்தையா என இனி கூகுள் சொல்லும். காரணம், ஏ.ஐ. திறன். அமெரிக்காவில் பணியாற்றிய ஆசிரியர், அங்கு எப்படி செயற்கை நுண்ணறிவு மனிதர்களை குறைந்த கூலிக்கு தள்ளுகிறது. இதன் வழியாக மனிதர்கள் எப்படி நேரத்தைப் பிடித்து தொங்காமல் எளிமையாக வாழலாம் என்பதைச்சொல்லுகிறார். இதனைக் கவனமாக படித்தால் எதிர்கால பணிச்சூழல் எப்படி இருக்கும் என ஊகித்துவிடலாம். கொடூரத்தின் சாட்சி 1940 களில் ஜெர்மனின் நாசிப்படையில் பணியாற்றிய ஒருவரின் கதை. அவர் எப்படி நாசிப்படையினரின் அட்டூழியங்களை நேசப

துரியோதனின் கதை! - கௌரவன் சொல்லும் தர்மத்தின் கதை!

படம்
கௌரவன் ஆனந்த் நீலகண்டன் எதிர்நாயகர்களைப் பற்றி கதைவரிசையில் ராவணனை அடுத்து கௌரவர்களில் ஒருவரான துரியோதனின் கதை. முதல்பாகத்தில் துரியோதனின் இளமைப் பருவம், பெற்றோரின் அன்பு கிடைக்காத வாழ்க்கையில் நண்பர்களே ஆதரவாக அமைகிறார்கள். ஏழைமக்கள் பற்றி கவலைப்படுபவனுக்கு பலராமனின் கதாயுதம் மூலம் கிடைக்கும் பலம், பீமனைப் பற்றிய பயத்தை நொறுக்குகிறது. இதன் விளைவாக பலம் பெறுபவன் சாதிமுறைக்கு எதிர்ப்பாக கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரன் என நண்பர்களை சேர்த்து அஸ்தினாபுரத்தில் வாழ்கிறான். ஆனால் காந்தார இளவரசன் சகுனியில் மனதில் தன் பெற்றோரை பீஷ்மர் கொன்ற வன்மம் குறையாமல் உள்ளது. இதற்காக சிறு கொள்ளையனான துர்ஜயன் மற்றும் கட்டிடக் கலைஞனான ஊழல் மனிதர் புரோச்சனன் ஆகியோரைப் பயன்படுத்துகிறான். பரதகண்டம், தென்னக மன்னர்கள் கூட்டமைப்பு என சாதிமுறைகளால் பிளவுபட்டு கிடக்கிறது. இதற்கு பரசுராமன் காரணமாக இருக்கிறார். அவருடன் செய்யும் உடன்பாட்டை நினைத்து பீஷ்மர் மருகுகிறார். அதேசமயம் இவர் தன் இளம் வயதை துரியோதனுடன் ஒப்பிட்டு ஒன்றுபோலவே இருக்கிறது என ஆறுதல் கொள்கிறார். பட்டத்து இளவரசராக துரியோதனன் கவனமாக ச

இந்தவார புத்தக வாசிப்பு!

படம்
ரஷ்யாதான் 1959 ஆம் ஆண்டு விண்கலனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அந்நாட்டை முந்தும் வேகத்தில் அமெரிக்கா, மனிதர்களை தயாரித்து நிலவுக்கு அனுப்பியது மிகப்பெரும் சாதனை. இன்றும் நாம் பிஎஸ்எல்வியா, ஜிஎஸ்எல்வியா என தடுமாறும் நிலையில் 1969 ஆம் ஆண்டு துணிச்சலாக கருவிகளோடு மனிதர்களையும் அனுப்பிய அதிபர்  ஜான் எஃப் கென்னடி மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் முயற்சிகள், பிரச்னைகள் ஆகியவற்றை அனுபவக்கட்டுரைகளாக பகிர்கிற நூல் இது. வயதாவது என்பது பலவீனமாக பார்க்கும் சமூகம் மேற்கத்தியது. ஆசியாவில் அதனை பெரும் பலமாக, பல்வேறு பொறுப்புகளை கொடுக்க நரைத்த முடி உதவுகிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் 50 வயது தொடங்கினாலே ஏன், 40 தொடங்கினாலே பெருசு என்று கூறத் தொடங்விடுவார்கள். நிலைமை அந்தளவு மாறியுள்ளது. இச்சூழலில் நாற்பது வயது ஆட்களின் சூழல், மனநிலைமை, அவர்களின் பிரச்னைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் பேசுகிறது. உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருள் ட்ரஃபிள். இது ஒரு பூஞ்சை என்றால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். நூல் முழுக்க பூஞ்சை ஏன் அதிக வில

வாசிப்பை மேம்படுத்தலாம் ஈசியாக. ...

படம்
வாசிப்பை மேம்படுத்துவோம்! வாசிப்பை மேம்படுத்த மாதம் ஒரு புத்தகம் என படித்தால் ஆண்டுக்கு பனிரெண்டு புத்தகங்களை உங்களால் படிக்க முடியும். தினசரி நூலில் பத்து முதல் 20 பக்கங்கள் வரை  படிப்பதை இயல்பாக்கிக் கொண்டால் இது சாத்தியமாகும்.  மாதம்தோறும் சந்தையில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளியாகின்றன. அத்தனை நூல்களையும் படிப்பது சாத்தியம் கிடையாது.  மாதம்தோறும் படிப்பதற்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு படியுங்கள். நூல்களைப் பற்றிய கருத்துகளை எழுதி வையுங்கள். இதன் மூலம் திரும்ப நூல்களைப் படிக்காமல் இந்த குறிப்புகளை படித்தாலே நூல் நினைவுக்கு வந்துவிடும்.  தினசரி அலுவலகம் வரும் வழியில் படிப்பதற்கு ஏதுவான இபுக் ரீடர், மொபைல் ஆப்களைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் புத்தகங்களை சுமக்கும் தேவை குறைகிறது.  இலட்சக்கணக்கான நூல்களை ஸ்மார்ட்போனில், டேபில் தரவிறக்கி படிக்க முடியும்.  புத்தகங்களை இலக்கு வைத்து படிப்பதோடு, அதனை பிறரிடம் பகிர்ந்துகொள்வதும் அவசியம். அப்போதுதான் வாசிப்பில் ஊக்கம் பெறமுடியும். இதற்காக புத்தக கிளப், நூலக வாசகர் வட்டம் என பல்வேறு இடங்களிலும் கலந

தூங்க வைக்கும் சுயமுன்னேற்ற நூல் - வெற்றிச்சிந்தனை

படம்
புத்தக விமர்சனம் வாகை சூடும் வெற்றிச்சிந்தனை மொழிபெயர்ப்பு: ராஜ்மோகன் ஐபிஎஸ் வெற்றி பெறுவதற்கான சிந்தனைகள்தான் நூலாகியிருக்கிறது. ஆனால் அதனை ஆன்மீகத்துடன் இணைத்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஆங்கிலப் புத்தகங்கள் குறைந்தது நானூறு பக்கங்களுக்கு எழுதித் தள்ளுகையில் ஆசிரியர் ரியோ ஒகாவா 138 பக்கங்களில் சொல்ல வந்ததை நறுக்கென சொல்லியிருக்கிறார்.  சில பக்கங்களைப் படிக்கும்போது அருகிலிருந்த அரசுகார்த்திக் மீது தூங்கி சரிந்துவிட்டேன். இதனால் புத்தகம் மோசம் என நினைத்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டுகள் சரியாக உட்காரவில்லை. இது ஒகாவின் உரையை அப்படியே மொழிபெயர்த்திருப்பதால், எழுத்துக்கான விஷயங்கள் அவ்வளவு உறுதியாக இல்லை. இவர் பேச்சை எழுத்து வடிவிற்கு மாற்றியிருப்பதற்கு பதிலாக ஆடியோவாக மாற்றியிருக்கலாம். எழுத்திற்கென இருக்கும் எந்த விஷயங்களும் இந்த நூலில் இல்லை.  இதனால்தான் மற்றொரு சுயமுன்னேற்ற நூலாக மாறியிருக்கிறது. துயரம்.  - சோபியா லாரன் நன்றி: பாலகிருஷ்ண மேனன்

தவிர்க்கமுடியாத திருடனின் கதை! - திருடன் மணியன் பிள்ளை

படம்
திருடன் மணியன்பிள்ளை ஜி.ஆர். இந்துகோபன் தமிழில்: குளச்சல் மு.யூசுப் காலச்சுவடு நடிகர், பாடலாசிரியர், கல்வித்தந்தை, எழுத்தாளர், அரசியல்வாதி என பலரும் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள். அதில் பலவற்றை நாமும் படித்திருப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில்தான் பாலியல் தொழிலாளி, திருடன் ஆகியோரின் சுயசரிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கேரளத்தைச் சேர்ந்த மணியன்பிள்ளை நாயர் குடும்பத்தில் பிறந்த திருடர். அவரின் திருட்டு, அவர் சந்தித்த மனிதர்கள், அவரைக் காதலித்த பெண்கள், போலீஸ்காரர்கள், சிறை அனுபவம், தொழிலதிபராக மாறியது, மறுவாழ்வு காலகட்டம் என நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு உணர்ச்சிகளை வாசிப்பவரின் மனதில் எழச்செய்யும் படைப்பு. எழுத்தாளரின் திறன், மணியன் பிள்ளையின் வாழ்க்கையை அழுந்தச்சொல்ல உதவியிருக்கிறது. மணியன் பிள்ளையின் தந்தை மதுவருந்தி குடிநோயால் இறந்துவிட பசியால் துடிப்பவருக்கு அவரின் நாயர் ஜாதியே எமனாகும் அவலம் கண்களில் நீர்கட்டவைக்கிறது. அவரின் தந்தைக்கு சேரும்படியான சொத்தை சதி செய்து அபகரிக்க குடும்பமே அந்த இடத்தில் வாழ முடியாமல் வேறிடம் நோக்கி போகும் காட்சி

தொழில்துறை வளர்ச்சியா? வீழ்ச்சியா?

படம்
வேலைவாய்ப்புகள் சரிவு என்று கூறும்போது வளர்ச்சி என்று ஆளும் கட்சியும், சரிவு என்று எதிர்கட்சிகளும் கூறி வாதிடுகின்றனர். திடீரென தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பதவி விலகுகின்றனர். இதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் சரியில்லை என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. சிறு நிறுவனங்களாக இருந்தவை வளராமல் அப்படியே சிறுநிறுவனங்களாகவே இருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு முதலீடு, நிலம், தொழிலாளர்கள், அடிப்படைக் கட்டுமானம் ஆகியவை தேவை. பேராசிரியர் அமித் கண்டேல்வால், ஜெரோம் ஏ சாசன் ஆகியோர் இதுபற்றி, இந்தியாவில் ஒருமுறை வேலைக்கு தேர்வானவர்களை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. காரணம், இந்திய அரசின் கடுமையான விதிமுறைகள்தான் என்று சுட்டிக்காட்டுகின்றனர். இவை பல்லாண்டுகளாக மாறுதல் பெறாமலே இருக்கின்றன என்றும் தலையில் குட்டுகின்றனர். அரசு நிர்வகிக்கும் வங்கிகளிடமிருந்து சிறுநிறுவனங்கள் கடன் பெற்றுவிடுவது மிக கடினம். பெரும்பான்மை வங்கிகள், சிறிய கம்பெனிகள் கடனைத்திரும்பி செலுத்தாது என்பதை ஊர்ஜிதம் செய்யாமலேயே நடவடிக்கையில் இறங்கி விடுகின்றன என்கிறார் அமித் கண்டேல்வால். ந

அவல நகைச்சுவையின் உச்சம் - அமர்பாரி டோமர்பாரி நக்ஸல்பாரி

படம்
குட்ரீட்ஸ் அமர் பாரி, டோமர் பாரி  நக்ஸல்பாரி கிராபிக் நாவல் சுமித் குமார் வடிவமைப்பு: ஷிகாந்த் சப்லானா ஹாரிசன் புக்ஸ் சத்தீஸ்கர், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உருவான நக்ஸல்பாரிகள் பற்றிய கதைதான். ஆனால் சொன்ன மொழியில்தான் அத்தனை காமெடியும் அரங்கேறுகிறது. முழுக்க முழுக்க அரசியல் செய்திகளின் அடிப்படையில் உருவான கிராபிக் நூல். ஓவியர் பாலமுருகன் இது பற்றிக்கூறிய போது, ஓவியங்கள் முதிர்ச்சியாக அமையவில்லை என்று கூறினார். ஆனால் படிக்கும்போது நீங்கள் விஷயங்களை சற்று உணர்ந்து இருந்தால், அது ஒரு பெரிய பிரச்னையாகவே தெரியாது. அப்படி ஒரு காமெடியாக படங்களையும், கார்ட்டூன்களையும் இணைத்து காமிக்ஸ் புத்தகமாக மாற்றியிருக்கிறார் சுமித் குமார். ஸ்க்ரோல்.இன் அதிலும் இதில் காமெடி எப்படி உருவாகியிருக்கிறது என்றால், உண்மையில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆனால் அதனை சுமித் குமாரின் ஓவியங்களிலும் எழுத்துக்களிலும் பார்த்தால் சிரிக்காமல் கடக்க முடியாது. அப்படி ஒரு அவல நகைச்சுவை சுமித்துக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்கள்: பழங்குடிகளை சாரு மஜூம்தார்

புதையல் டைரி என்ன சொல்கிறது?

படம்
புதையல் டைரி யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் விகடனில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலுக்காக பாலபாரதி விருதுபெற்றிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவரது புதையல் டைரி என்ற நூல் வாசிக்க கிடைத்தது. மகேஷின் கைவண்ணத்தில் ஓவியங்கள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன. ஜான்சனின் தாத்தா இறந்துவிடுகிறார். தன் பேரனுக்கு பரிசாக ஒரே ஒரு டைரியை விட்டுச்செல்கிறார். அதில் பல்வேறு புதிர்கள். நண்பர்கள் எப்படி புதிர்களை விடுவித்து பொக்கிஷத்தை அடைகிறார்கள் என்பதே கதை. புதிர்கள் அனைத்தும் சிறுவர்களின் புத்திக்கு ஏற்றபடி கிடையாது. சில இடங்களில் ஸமீரா, சில இடங்களில் சர்ச் பாதிரியார் என உதவி வழிகாட்டுகிறார்கள். இறுதியாக தாத்தா தன் பேரனுக்கு என்ன பரிசை தந்துவிட்டு சென்றார் என்பது நீங்கள் வாசித்து அறிய வேண்டியது அவசியம். கணிதம், வேதியியல், அளவீடுகள், சமயோசித திறன் என அனைத்து விஷயங்களையும் நூலில் பயன்படுத்தி கதையையும் சுவாரசியப்படுத்தி உள்ளார் பாலபாரதி. இவரது உழைப்பிற்கு சான்றாக விடுகதைகளின் இறுதி முடிச்சை அவிழ்க்கும் ஸமீராவின் பெயரைக் கூறலாம். இஸ்லாமிய தளங்களில் இப்பெயருக்கான அர்த்தத்தை தேடியபோது,

மருத்துவத்தில் உள்ள தந்திரங்கள்!

படம்
மருத்துவ அரசியல் கீழைக்காற்று பல்வேறு மருத்துவக்கம்பெனிகள் எப்படி இந்தியர்களை  மருத்துவச்சோதனைக்கு பயன்படுத்திக்கொள்கின்றன என்பதிலிருந்து எலும்புகளை விற்கும் மேற்கு வங்காள கம்பெனி  சீக்ரெட் , காப்புரிமையை எப்படி கம்பெனிகள் மாற்றி ஏமாற்றுகின்றன என்பது வரை துல்லியமான விவரங்கள் வாசிக்கும்போது அதிர்ச்சியடைய வைக்கின்றன.  தலை விழுந்தால் எனக்கு வெற்றி பூ விழுந்தால் உனக்கு தோல்வி என்பதுபோல மருத்துவ சோதனைகளை திட்டமிட்டு டாக்டர்களை வளைத்து சரிக்கட்டி செய்யும் தந்திரங்கள் மிரள வைக்கின்றன.  ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பணத்தைக் கொட்டி தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்து லாபவெறிக்கு மக்களை பயன்படுத்தும் மருந்து வணிகம் பலரும் அறியாத ஒன்று. இதில் அரசு மருத்துவமனைகள் எளிய இலக்காகவது தற்செயலான ஒன்றல்ல. -கோமாளிமேடை டீம்.

ஒரு லட்ச ரூபாய் கனவு காரின் கதை!

படம்
டாடா நானோ தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி கிழக்கு 2005 ஆம் ஆண்டு டாடா ஏஸ் அறிமுக விழாவில் பயணிகள் கார் தயாரிப்பில் குறைந்த விலை கார் தயாரிக்கும் எண்ணத்தை பத்திரிகை நிருபர் ரத்தன் டாடாவிடம் போட்டுவாங்க டாடா நானோ தயாரிப்பின் பிள்ளையார் சுழி போடப்படுகிறது. டாடா நானோ மேற்கு வங்காளத்தில் சிங்கூர் ஆலை போராட்டத்தை சந்தித்து பின்னர் குஜராத்தில் தொழில்தொடங்கி நானோவை அறிமுகப்படுத்துவது வரையிலான வரலாற்றை கூறுகிற நூல் இது. சேர்மன் ரத்தன் டாடாவின் கனவை நிறைவேற்றுவது டாடா மோட்டார்ஸ் குழுவினருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 534, 586, 634 என பல்வேறு எஞ்சின்களை மாற்றி திட்டமிட்ட ஒரு லட்ச ரூபாய்க்குள் உதிரிபாகங்களை  வாங்குவது அடுத்த பிரச்னையாக எழ எப்படி சமாளித்து சந்தைக்கு நானோவை கொண்டுவருகிறார்கள் என்பது சாதனை சரித்திரம். டாடா நானோவில் புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு என்று ஏதும் கிடையாது. குறைந்த விலை கார் என்பதே இதற்கான விளம்பரம், அதே காரணத்தால் நானோவின் வடிவமைப்பு தள்ளிப்போனது. தற்போது மே 2018  நானோ நஷ்டம்  தந்ததால் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக விக்கிப்பீடியா தகவல் தருக

மரணதண்டனைக் கைதியின் இறுதிநாள் - புத்தக விமர்சனம்

படம்
மரணதண்டனைக் கைதியின் இறுதிநாள் விக்தோர் ஹ்யூகோ க்ரியா விலை ரூ.110 மரணதண்டனை விதித்த கைதியின் மனநிலை எப்படியிருக்கும்? அதுதான் விக்தோர் ஹ்யூகோவின் குறுநாவலின் மையம்.  சிறைச்சாலை சூழல், தான் வாழ்ந்த முந்தைய வாழ்க்கை, உணவு, ஆறுதல் வார்த்தைகள், இருளை கண்களைக் கடந்தும் உணர்தல் என இருளடைந்த வார்த்தைகளின் சேர்க்கையும், வலியும் சூழ்ந்து கைதியை வதைக்கின்றன. அதிலும் இறக்கப்போகிறவனை எதிர்கொள்ளும் சக சிறைக்கைதிகளின் மகி்ழ்ச்சிக் கூக்குரல் மரண தண்டனைக்கைதியை எப்படி பாதிக்கிறது ? சுயநினைவே இழக்குமளவு.  மரணதண்டனை விதிக்கப்பட்டவன் வாழ்க்கையில் இனி சிரமமே படப்போவதில்லை என்று பலர் நினைத்தாலும் அவரவருக்கென கவலைப்பட ்ஒரு வாழ்க்கையும் நிறைவேறாத கனவும் இருக்கத்தானே செய்கிறது? கைதிக்கும் அப்படியொரு வாழ்க்கை இருக்கிறதுï அதில் மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். அதிலும் கடைசி நாள் தந்தையை சந்திக்கும்போது குழந்தைக்கு தன் தந்தைதான் அவர் என்ற உண்மைகூட தெரியாதிருக்கிறது. அப்பா என்று தெரிவிப்பதை தான் இறக்கும் செய்தியை தன் குழந்தைக்கு அப்பாவாகிய கைதி தெரிவிக்கும் இடத்திலுள்ள குரூர வன்முறை நூலில

சர்வாதிகார அமைப்பா ஆர்எஸ்எஸ்?

படம்
ஆர்எஸ்எஸ் வரலாறு கடந்து வந்த பாதையும், செய்ய வேண்டிய மாற்றங்களும் சஞ்சீவ் கேல்கர் தமிழில் சாருகேசி கிழக்கு பதிப்பகம். நூலின் தலைப்பே சொல்லிவிடும் இது எதுமாதிரியான புத்ததகம் என்று. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணிகளில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சார்ந்த சஞ்சீவ் கேல்கர் நடுநிலையாக எழுதியுள்ளதாக அவரே கூறிக்கொள்கிறார். அப்படி அமைய வாய்ப்பேயில்லை என்பது சில அத்தியாயங்கள் படித்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதேசமயம் டாக்டர் ஹெட்கேவர் தொடங்கிய அமைப்பில் தேவரஸ் பற்றி விளக்கமாக எழுதிய ஒரே நூலாக இதுவே இருக்கலாம். 1925 ஆம் ஆண்டு தசராவில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் இன்று மத்தியில் ஆட்சியில் உள்ளது. இந்து இந்துஸ்தான் இ்ந்தி என்ற விஷயங்களை தீவிரமாக  எதிரிகளை வன்முறையில் ஒடுக்கியாவது ஆர்எஸ்எஸ் கடைபிடிப்பது அவசியம் என இறுதியில் ஒப்புதல் வாக்குமூலமே ஆசிரியர் கொடுத்துவிடுகிறார். இதனை நேர்மை என ஒப்புக்கொள்ளலாம். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காமல் தன் மீதான 1948 ஆண்டு தடையை நீக்க ஜெயில் போராட்டம் நடத்தியதை கடுமையாக இடித்துரைக்கிறார். இதனை ஆசிரியர் செய்வதற்கான துணிச

மோடியின் எக்ஸாம் மந்திரங்கள்!

படம்
donkeyhotey மோடியின் எக்ஸாம் மந்திரங்கள் ! மோடி எழுதியுள்ள எக்ஸாம் வாரியர் நூலில் மாணவர்களுக்கு பல்வேறு யோசனைகளை கூறியுள்ளார் . நூலில் அப்படியென்ன உள்ளது ? மொத்தம் 25 அறிவுரைகள் . பெற்றோர் , ஆசிரியர் கூறுவார்களே அதே தேய்ந்துபோன அறிவுரைகள்தான் . ஒன்று யோகா தொடர்பானது . நேரு சிறையிலிருந்தபோது தனது மகளான இந்திராவுக்கு பல்வேறு வெரைட்டியான கருத்துகளில் 30 கடிதங்களை எழுதினார் . ஆனால் இங்கு மோடி தேர்வில் ஜெயிப்பது எப்படி என மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார் . 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இளைஞர்கள் மூலம் ஜெயிப்பது என்ற பிளானில் நூலை தயாரித்திருப்பார்கள் போல . இதில் மோடி ஆப் , மாணவர்கள் இணையக்குழு ஆகியவையும் உண்டு . அறிவைத்தேடுவது சிறந்த பரிசு என்று எழுதும் மோடி , அதனை சமர்த்தாக பயன்படுத்தக்கூறுவது தேர்வுகளில் மட்டும்தான் . பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளும் கூட மாணவர்களிடம் வலியுறுத்துவது நல்ல மதிப்பெண்களின் பாஸ் செய்வதைத்தானே ! தேர்வுகளை கண்டு மாணவர்கள் பயம் கொள்வது ஏன் என்பதை மோடி யோசிக்கவில்லை . தன்னுடைய உற்சாகமான குரலில் நல்ல மார்க்குகளை மாணவர்கள் பெ

புத்தக வாசிப்பு: சொர்க்கத்தில் அருகிலிருந்து வந்தவன்

படம்
சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் - லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் தொகுப்பும் மொழியாக்கமும் : அமரந்த்தா யாழ், காலக்குறி பதிப்பகம் விலை ரூ. 400 அமரந்த்தாவின் மொழியாக்கம் மற்றும் தொகுப்பில் இந்த சிறுகதை நூலில் 33 சிறுகதைகள் உள்ளன. அனைத்தும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வல்லரசு நாடுகளால் ஏற்படும் போர், சர்வாதிகாரம், வறுமை, பஞ்சம் ஆகியவற்றை இக்கதைகள் உணர்வும் வலியுமாக பேசுகிறது. தொகுப்பிலுள்ள மார்க்கேஸின்  ஆகஸ்டு மாத ஆவிகள், தூங்கும் அழகியோடு ஒரு பயணம் ஆகிய சிறுகதைகள் ரசிக்கும் வண்ணம் உள்ளன.  கார்மென் நாரன்ஹோவின் நாங்கள் மழையை விற்றுவிட்டோம் சிறுகதை வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளை அடிமைப்படுத்த எப்படி கடன் வழங்குகின்றன என்பதை தீவிரப்பகடியாக பேசுகிறது. அன்று செவ்வாய்க்கிழமை அதை எப்படி மறக்கமுடியும் - ராவுல் தோர்ரெஸ் எழுதிய சிறுகதை. வேலை நிறுத்த தொழிலாளர்கள் சர்வாதிகார அரசு எப்படி கையாள்கிறது என்பதை கண்ணீரும் நம்பிக்கையுமாக பேசுகிற கதை. கலங்கடிக்கும் வரிகள், வார்த்தைகள் என நெஞ்சே ஒருகணம் நினைவுகளின் படுகுழியில் தடுமாறி நின்றுபோகிறது. ரூல்போவின் என்னை கொல்லவேண்டாமென்று அவர்களிடம்