இடுகைகள்

காமிக்ஸ் - லெப்டினென்ட் டைகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீதியின் வலதுகரமாக டைகர் பின்னி எடுக்கும் மின்னும் மரணம்!

படம்
image: devianart மின்னும் மரணம் - நீதியின் வலது கரம் சார்லியர் - ஜிர் என எழுத்தாளர், ஓவியர் இணை இணைந்து செய்த சாகசம்தான் லெப்டினென்ட் டைகர் கலக்கும் மின்னும் மரணம்.  1860 களில் நடக்கும் கதை. உள்நாட்டுப்போரில் தெற்கத்திய ஆட்கள் மறைத்து வைத்த தங்கத்தை தேடி அமெரிக்க அரசு, வெகுமதிவேட்டையர்கள், மெக்சிகன்கள் அலையும் அநாயச கதை.  கேப்டன் டைகர் என்ற பெயரில் முத்து காமிக்ஸ் வெளியிட்ட கதை. இப்போது சரியான மொழிபெயர்ப்பில் லெப்டினென்ட் என திருத்தமாக வெளியாகிறது. என்ன விலைதான் ரூ. 1000. வாங்கிப்படித்து நண்பர்களுடன் பகிரலாம்.  லெப்டினென்டாக உள்ள டைகர், மாதத்திற்கு ஒருமுறை குளித்தாலும் நீதியின் வழுக்காத வலது கரம். மனிதர்களை அநாவசியமாக கொல்பவர் கிடையாது. செவ்விந்தியர்களோ, வெள்ளையர்களோ அனைவரையும் நம்மவராக கருதுபவர். அனைவரும் விக்ரமன் பட கேரக்டர்களாக இருந்தால் எப்படி கதை நகரும். ட்விஸ்ட் இங்கேதான் வருகிறது.  சும்மா காடுமேடு எல்லாம் சுற்றி அலைந்த டைகரிடம் மெக்சிகோவுக்கு அனுப்பிய தங்கத்தை தேடிப்பெறும் ஒப்பந்தம் கிடைக்கிறது. ஜிம்மி, ரெட் சகிதமாக கிளம்புவருக்கு சிகுவாகுவா சில்க் என்