இடுகைகள்

புதிய நூல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய நூல்கள் அறிமுகம் - ஆப்கன் பெண்களின் கதை, தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?, ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள்

படம்
  லைஃப் இன்ட்ரப்டட் அம்ரிதா திரிபாதி அபிஜித் நட்கர்னி, சௌமித்ர பாதரே சைமன் ஸ்ஹஸ்டர் 599 இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதைத் தடுக்க என்ன வழி இருக்கிறது? இப்படி தற்கொலை செய்வதில் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளனர். இதில் பல்வேறு ஆய்வுகள், செய்திகள், நேர்காணல்கள் உள்ளன. மை பென் ஈஸ் தி விங் ஆப் எ பேர்ட் ஹாசெட்  599 இந்த நூலில் ஆப்கன் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. பதினெட்டு எழுத்தாளர்கள் கதைகளை எழுதியுள்ளனர். குடும்பம், வேலை, நட்பு, பாலினம் என பல்வேறு கருத்துகளை அடிப்படையாக கொண்டு கதைகளை எழுதியுள்ளனர். இக்கதைகளில் ஒலிக்கும் குரல்கள் அசலானவை என்பதே முக்கியமாக உள்ளது.  ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ் ரூமிலா சென் ஆக்ஸ்போர்ட் பிரஸ் இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அவர்களின் லட்சியத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்பதை எழுத்தாளர் விளக்கியுள்ளார்.  தி ஸ்டோரிஸ் வீ டெல் தேவ்தத் பட்நாயக் ஆலெப் 499 இந்நூல் தொகுப்பில் 72 கதைகள் உள்ளன. இந்திய புனைவு மரபிலிருந்து அனைத்து கதைகளையும் உணர்ந்து படிக்க வேண்டும். அப்படித்தான் பட்நாயக் எழுதியுள்ளார். எழுத்தாளரின்

இளம் வயதினருக்கான சிறந்த நூல்கள் - 2018- 2021

படம்
  2018 சில்ட்ரன் ஆப் பிளட் அண்ட் போன் டாமி அடியெமி மேற்கு ஆப்பிரிக்க புனைவை அடிப்படையாக கொண்ட நூல். ஸெலி அடிபோலா என்ற இளம் வயது பாத்திரம்தான் நாயகன். தனது நாட்டிலுள்ள அழிந்துபோன மாயமந்திர சமாச்சாரங்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.  2018  டாரியஸ் தி கிரேட் ஈஸ் நாட் ஓகே அடிப் கொர்ரம் இரானுக்கு செல்லும் டாரியஸ் கெல்னர், தனது பயணத்தின் வழியே வாழ்க்கையை உணர்வதுதான் கதை. பதற்றம், தனிமைப்படுத்தல், இனக்குழு உணர்வு, அடையாளம் என பல்வேறு உணர்ச்சிகள் நாவலில் உள்ளன.  2019 ஃபிராங்லி இன் லவ் கொரிய அமெரிக்க மாணவன் ஃபிராங்க் லீ, பள்ளியில் படித்து வருகிறான். அங்கு அவன் வெள்ளை இனப் பெண்ணை காதலிக்கிறான். அவனது பெற்றோர் அவன் கொரியப் பெண்ணை காதலித்து மணக்கவேண்டுமென விரும்புகின்றனர். ஃபிராங்க் இரண்டு கலாசாரங்களுக்கு இடையில் அல்லாடி வாழ்க்கையை தேடி உணர்வதுதான் கதை.  லாரா டீன் கீப் பிரேக்கிங் அப் வித் மீ மாரிகோ டமாகி  ரோஸ்மேரி வலேரோ ஒ கானல் பள்ளியில் மிக அழகான பெண் லாரான் டீன்தான். அவள் ஃபிரெடி என்பவனின் பெண் தோழியாகிறாள். அந்த நாள் ஃபிரெடிக்கு முக்கியமானது. ஆனால் லாரா டீனின் மோசமான குணம் அதற்குப் பிறகுதா

நியூசிலாந்து நாட்டை தலைநிமிரச் செய்த பிரதமரின் வாழ்க்கை ! புதிய புத்தகங்கள் அறிமுகம்

படம்
                புதிய புத்தகங்கள் அறிமுகம் ஸ்கில் இட் கில் இட் ரோனி ஸ்க்ரூவாலா பெங்குவின் ராண்டம் ஹவுஸ் ரோனி ஸ்க்ரூவாலா , தனது வாழ்க்கையில் சந்தித்த வெற்றி , தோல்விகளை வைத்து பல்வேறு மென்திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என விளக்கியுள்ளார் . பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநர்களும் பல்வேறு நேர்காணல்கள் , வேலை செய்யும் முறை ஆகியவற்றைப் பற்றி தொடர்ச்சியாக எதற்கு பேசுகிறார்கள் என்பது அறிய படிக்க வேண்டிய நூல் இது . ஜெசிண்டா ஆர்டெர்ன் சுப்ரியா வாணி , கார்ல் எ ஹார்ட்டே ஹார்ப்பர் கோலின்ஸ் 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக ஆனது முதல் ஜெசிண்டா தீவிரவாதம் , பெண்கள் , எல்ஜிபிடி , தொழிலாளர் சீர்திருத்தங்கள் , பருவச்சூழல் மாற்றம் ஆகியவற்றில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார் . எப்படி விஷயங்களை வேறுபட்ட கோணத்தில் பார்த்து முடிவெடுத்து மக்களுக்கான நன்மையை செய்யமுடியும் என்பதில் ஜெசிண்டாவும் பலரும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன . டெஸ்ட் காட்ஸ் நிக்கோலஸ் ஸ்மிடில் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் விண்வெளி சுற்றுலா எ

பராக் ஒபாமா விரும்பி படித்த நூல்கள் இவைதான்!

படம்
பராக் ஒபாமா விரும்பிய புத்தகங்கள்! தகவல் யுகத்தில் மனிதர்கள் எப்படி பொருட்களாக மாறுகிறார்கள். அவர்களை எப்படி கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை ஆசிரியர் சோசனா கூறியுள்ளார்.  இந்தியா முழுக்க பல்வேறு வணிக குழுக்கள் வியாபாரம் செய்தன. அதற்காக பல்வேறு நாடுகளை காலனியாக்கி ஆட்சி செய்தன. அது பற்றிய வரலாற்றை ஆசிரியர் கூறுகிறார். மொகலாயர் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனி வரையில் இந்த வரலாறு நீள்கிறது.  1890 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான செவ்விந்தியர்களின் வாழ்க்கை பதிவாகி உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை த் தாக்குதல்களை நூல் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஆண்ட்ரேவின் சுயசரிதை. இதில் அவரின் வாழ்க்கை, விளையாட்டில் ஈடுபட்ட அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்.  நன்றி - எகனாமிக் டைம்ஸ் 

புதிய புத்தகங்கள் அறிமுகம் - ஜூன் 2019

படம்
புதிய புத்தகங்கள் அறிமுகம் 10 Women Who Changed Science and the World Rhodri Evans  and  Catherine Whitlock அறிவியல் துறையில் உலகை கவனிக்க வைத்த மேரி க்யூரி முதல் ரேச்சல் கார்சன் வரையிலான பெண்களைப் பற்றி பேசும் நூல் இது.  Bottle of Lies: The Inside Story of the Generic Drug Boom by   Katherine Eban மருத்துவத்துறையில் ஜெனரிக் மருந்துகள் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை ஆசிரியர் கேத்தரின் இபன் புட்டு வைக்கிறார்.  Superior: The Return of Race Science by   Angela Saini அறிவியல் துறையில் விஷமாய் உள்ளே நுழைந்த இனத்தூய்மை வாதம், தேசியவாதம் எப்படி உலகை பின்னிக்கு இழுத்துச்சென்றது என்பதை ஆஞ்சலா சைனி விளக்கமாக நூலில் எழுதியுள்ளார்.  Nuking the Moon: And Other Intelligence Schemes and Military Plots Left on the Drawing Board இராணுவத்தில் எதிரி நாடுகளை உளவறிய என்னென்ன திட்டங்களை தீட்டுவார்கள். உலகிற்கு அறியாத இப்படியும் நடக்குமா என்று எண்ணும் திட்டங்கள், தோல்வியடைந்த ஐடியாக்கள் ஆகியவற்றைக் குறித்த நூல் இது. சுவாரசியமாக படிக்கலாம்.  நன