புதிய நூல்கள் அறிமுகம் - ஆப்கன் பெண்களின் கதை, தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?, ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள்

 
















லைஃப் இன்ட்ரப்டட்

அம்ரிதா திரிபாதி

அபிஜித் நட்கர்னி, சௌமித்ர பாதரே

சைமன் ஸ்ஹஸ்டர்

599

இந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதைத் தடுக்க என்ன வழி இருக்கிறது? இப்படி தற்கொலை செய்வதில் இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளனர். இதில் பல்வேறு ஆய்வுகள், செய்திகள், நேர்காணல்கள் உள்ளன.



மை பென் ஈஸ் தி விங் ஆப் எ பேர்ட்

ஹாசெட் 

599

இந்த நூலில் ஆப்கன் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. பதினெட்டு எழுத்தாளர்கள் கதைகளை எழுதியுள்ளனர். குடும்பம், வேலை, நட்பு, பாலினம் என பல்வேறு கருத்துகளை அடிப்படையாக கொண்டு கதைகளை எழுதியுள்ளனர். இக்கதைகளில் ஒலிக்கும் குரல்கள் அசலானவை என்பதே முக்கியமாக உள்ளது. 




ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்

ரூமிலா சென்

ஆக்ஸ்போர்ட் பிரஸ்

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அவர்களின் லட்சியத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்பதை எழுத்தாளர் விளக்கியுள்ளார். 




தி ஸ்டோரிஸ் வீ டெல்


தேவ்தத் பட்நாயக்

ஆலெப்

499

இந்நூல் தொகுப்பில் 72 கதைகள் உள்ளன. இந்திய புனைவு மரபிலிருந்து அனைத்து கதைகளையும் உணர்ந்து படிக்க வேண்டும். அப்படித்தான் பட்நாயக் எழுதியுள்ளார். எழுத்தாளரின் இணையதளமான டீடைம் டேல்ஸ்தான் கதைகளின் மூலம். 




1946 ராயல் இந்தியன் நேவி 

மியூட்டினி

பிரமோத் கபூர்

ரோலி புக்ஸ்

695

1946இல் பிரிட்டிஷ் நேவில் இனவெறி காரணமாக வீரர்களை பாகுபாடாக நடத்தினர். இதனால் வீரர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினர். இரண்டு நாட்களில் 78 கப்பல்களை கையில் எடுத்துக்கொண்டு பிரிட்டிஷ் கொடியை இறக்கி காங்கிரசின் கொடியை ஏற்றினர். இதுபற்றிய சம்பவத்தை விவரிக்கிறது இந்த நூல். 

பினான்சியல் எக்ஸ்பிரஸ் 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்