காங்கிரஸின் ஆதார் திட்டத்தை பாஜக அரசு சிறப்பாக செயல்படுத்திவருகிறது! - நந்தன் நீல்கேனி, இன்போசிஸ்
நந்தன் நீல்கேனி படம் - மின்ட் |
நந்தன் நீல்கேனி
இன்போஸிஸ் துணை நிறுவனர்
மில்லினியத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட பழக்கம்?
டிவி பார்ப்பதை புதிதாக தொடங்கியிருக்கிறேன். இது மில்லினிய பழக்க வழக்கமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.
டிவியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்ன?
இன்வெஸ்டிகேட்டிங் அன்னா என்ற நிகழ்ச்சியை இப்போது பார்த்து வருகிறேன்.
நீங்கள் மதிப்பு அளிக்கும் வணிக நிறுவன தலைவர் யார்?
உலகளவில் மைக்ரோசாஃப்டின் பில்கேட்ஸ். இந்தியாவில் நாராயண மூர்த்தி, ரத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி ஆகியோரைக் குறிப்பிடலாம். இப்படி நட்பு பட்டியலில் நிறையப் பேர் உள்ளனர். அண்மையில் காலமான ராகுல் பஜாஜ் கூட என்னுடைய நண்பர்தான்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததாக நினைப்பது?
ஆதார் கார்ட் திட்டத்தை உருவாக்கியதுதான். இன்றும் கூட அந்த அடையாள அட்டை திட்டம் சிறப்பாக வேலை செய்கிறது. நான் இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வந்துவிட்டாலும் கூட ஆதாருக்கான நான் உழைத்த உழைப்பை மறக்கவே முடியாது.
கூகுள், பேஸ்புக் என இரண்டில் எது குறைந்த தீமை கொண்டது?
இரண்டுமே சிறந்த நிறுவனங்கள்தான். கூகுளின் பல்வேறு சேவைகள் உபயோகமானவையாக உள்ளன.
மின்வாகனங்களைப் பயன்படுத்துவதில் சீனா, அமெரிக்கா யார் சிறந்த நாடு?
சீனா, இத்துறையில் நிறைய முதலீடுகளைக் குவித்துள்ளது. இப்போதைக்கு அவர்கள்தான் அதிகளவு மின் வாகனங்களை சந்தையில் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காதான் முன்னோடியாக உள்ளது. டெஸ்லா, ஃபோர்டு நிறுவனங்கள் இந்த வகையில் நிறைய கண்டுபிடிப்புகளை செய்து வருகின்றனர்.
ஆதார் கார்ட்டை பயன்படுத்துவதில் எந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது - காங்கிரசா, பாஜகவா?
ஆதார் கார்ட்டை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது. ஆனால் அதனை இன்று சிறப்பாக பயன்படுத்தும் அரசு பாஜகவினுடையதுதான்.
அரசின் சேவை ஒன்றை எடுத்துக்கொண்டு இன்போசிஸ் செய்யவேண்டும் என்றால் எதை கையில் எடுக்கும்?
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், நேரடியான மறைமுகமான வரி அமைப்பு முறையை நாங்கள பெற்று அதனை மேம்படுத்துவோம். இதன்மூலம் அது மக்கள் எளிதாக பயன்படுத்தும்படி மாறும்.
வைத்தியநாதன் ஐயர்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக