அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!
பிட்ஸ்
பெங்குவின்
அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.
அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.
பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களிலுள்ள கூர்மையான நகங்கள் பாறைகளைக் கொண்ட அன்டார்டிகா பகுதியில் உறுதியாக பற்றி ஏற உதவுகின்றன. உறைபனி மற்றும் ஐஸில் முன்னோக்கி செல்லும்போது கால்களிலுள்ள நகங்கள் உதவுகின்றன. வலை போன்ற அமைப்பிலுள்ள கால்கள், குளிர்ந்த நீரில் நீந்திச்செல்லும்போது பயன்படுகின்றன.
கூச்சல் போட்டு நீரில் நீந்திக்கொண்டிருந்தாலும் தனக்கான கூட்டை அமைத்து அதில் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதல் அடேலி பெங்குவின்கள் கவனமாக இருக்கும். கூட்டிற்கான முக்கியமான தேவை கூழாங்கற்கள், சிறு கற்கள். இவற்றை பரப்பி வைத்து அதில்தான் முட்டைகளை இடும்.
கூழாங்கற்களை பாதுகாப்பது பெங்குவின்களுக்கு மிக முக்கியம். கொஞ்சம் அசந்தால் கூட பிற பெங்குவின்கள் அவற்றை களவாடிவிடும். பிறகு அதனை மீட்க பெங்குவின்கள் இறக்கைகளால் கோபத்துடன் சண்டை போடும். மிகவும் அரிதாகவே பெற்றோரும் குஞ்சுகளும் கூட்டைவிட்டு அகலும். அந்த நேரத்தில் கற்களை கொள்ளையடிக்கும் அருகிலுள்ள பெங்குவின்கள் பெரிய வீட்டைக் கட்டும்.
ஆதாரம்
நேஷனல் ஜியோகிராபிக் ஜனவரி 2022
so many penguins
ng kids jan 22
கருத்துகள்
கருத்துரையிடுக