விவசாயக் கழிவுகளில் வருமானம் கிடைக்கும்!

 














விவசாயக் கழிவில் வருமானம்!

டில்லியைச் சேர்ந்த டகாசர் நிறுவனத்தின் துணை நிறுவனர், வித்யுத் மோகன். இவர் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு நிலத்தில் தேங்கும் கழிவுகளை எரிபொருளாக, உரமாக மாற்றலாம் என்கிறார். இதன் காரணமாக விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிக்க வேண்டியிருக்காது. மேலும் கழிவுகள் உரமானால் அதனை  எளிதாக நல்ல தொகைக்கு விற்கமுடியும். இந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. கழிவுகளை உரமாக்கும், எரிபொருளாக்கும் எந்திரங்களை மலிவான விலையில் தயாரித்து வழங்குவதுதான் மோகனின் பணி.

கடந்த ஆண்டில் சிறந்த சூழல் கண்டுபிடிப்புக்காக எர்த்ஷாட் பரிசு பெற்ற ஐந்து கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். தனது இயந்திரத்தை ஆப்பிரிக்கா, இந்தியாவின் ஹரியாணா  ஆகிய இடங்களில் சோதனை செய்துள்ளார். நெதர்லாந்தில் டெல்ஃப்ட்  தொழில்நுட்ப கழகத்தில் முதுகலை ஆய்வு செய்தபோது, எந்திரத்தை உருவாக்கும் ஐடியா கிடைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளார். ”வைக்கோல், உமி, தேங்காய் ஓடு ஆகியவற்றையும் எந்திரத்தின் வழியாக உரமாக மாற்றலாம் ”என தன்னம்பிக்கையோடு கூறுகிறார் வித்யுத் மோகன். இவரின் கருவியை டிராக்டர்களிலும் இணைத்துக்கொள்ள முடியும்.

தகவல்

India today

use and refuse (vidyut mohan) 

3 jan 2022


கருத்துகள்