அலப்பறை டில்லுவுக்கு ஆப்பு வைக்கும் செக்ஸி காதலி! - டிஜே டில்லு - சித்து, நேகா ஷெட்டி

 









டிஜே டில்லு

கதை, திரைக்கதை

சித்து ஜோனல்கட்டா

இயக்கம்

விமல் கிருஷ்ணா

இசை

ஸ்ரீசரண் பகலா

ராம் மிர்யாலா

பின்னணி இசை 

தமன் எஸ்


தெலுங்கானாவில் வாழ்பவர் டிஜே டில்லு. இவர் அப்பா வைத்த பெயர் பால கங்காதர திலகர். அதை ஸ்டைலாக மாற்றி வைத்துக்கொண்டு உள்ளூர் விசேஷங்களுக்கு பீதி ஏற்படுத்தும் படி டிஜே செய்துகொடுத்து அலப்பறை கொடுத்து வருகிறார். 

இவர் வாழ்க்கையில் வருகிறார் ராதிகா. டிஜே டில்லு மொழியில் ஆஸ்கார் அவார்ட் வின்னர் ராதிகா ஆப்தே. இவரை டில்லு உண்மையில் காதலிக்கிறார். ஆனால் ராதிகா டில்லுவை காதலெல்லாம் செய்யவில்லை. சில சிக்கல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இவற்றிலிருந்து டில்லு எப்படி மீள்கிறார் என்பதே கலாட்டாவான கதை. 




சித்துவின் எழுத்திலும் திரைக்கதையிலும் உள்ள பகடி இப்படத்திலும் உண்டு. முந்தைய படங்களை விட இதில் காமெடி சிறப்பாக மெருகேறியுள்ளது. 

என்னை எப்பவுமே ஏன் டில்லு நம்ப மாட்டேங்குற?

ராதிகா, நிஜமாகவே இந்த கேள்வியை நீ என்கிட்ட கேட்கிறியா?

பிளானை சரியா போட மாட்டியா? பாரு பிகின்னர்ஸ் மிஸ்டேக்ஸ்....

கான்ட்ரிபியூஷன் பண்ணாம கரெக்ஷன்  மட்டும் சொல்லிக்கிட்டு இருக்குற...

பிரஷ்ஷர் எனக்கு பிளஸ்ஸர் எல்லாம் அவனுக்கா....

நான் யாருன்னு இவனுக்கு தெரியாது. இவன் யாருன்னு எனக்கு தெரியாது. எங்க எல்லோரையும் தெரிஞ்சது ஒரே ஆள் ஆஸ்கார் அவார்ட் வின்னர் ராதிகா ஆப்தே. அதை தெரிஞ்சிக்கிட்டவன் செத்துட்டான். இனி நாம கடவுள்கிட்ட போய்தான் உண்மைய தெரிஞ்சுக்கணும். 

நாம நமக்குன்னு சொந்தமாக ஒரு நிலத்தை வெச்சிருக்கோம். அது நம்மளோடதுன்னு நெனச்சோம். ஆனா இப்போ ஊருல இருக்கிற அத்தனை பேரும் அது தன்னோடதுன்னு சொல்லிட்டிருக்கான். இப்ப நாம என்ன செய்யறது? 




இப்படி நாங்கள் சொல்வதைக் கேட்டால் உடனே அப்போ இதை ஹலோ எப்எம்மில் ஒலிச்சித்திரமாகவே கேட்டுக்கலாம் என நினைப்பவர்களே அதிகம். ஆனால் காட்சிகளாக பார்த்தால் அந்த டைமிங் காமெடிக்கு வயிறு குலுங்க சிரிப்பீர்கள். இந்த வகையில் படம் இளைஞர்களுக்கானது. 

சித்து, டில்லுவாக சிறப்பாக நடித்திருக்கிறார். நேகா ஷெட்டிக்கு கொஞ்சம் நெகட்டிவ்வான வேடம். கொடுத்த வேடத்தை அப்பாவித்தனமும், தந்திரமுமாக நடித்திருக்கிறார். பிரம்மாஜி போலீஸ் கேரக்டரில் செமையாக நடித்து சின்ன பாப்லோ எஸ்கோபாராகிறார். படத்தின் இறுதியில் தான் முக்கியமான திருப்பங்கள் வருகின்றன. 



படம் முழுக்க அடல்ட் ஆட்களுக்கானது. எனவே, குடும்பத்திலுள்ளவர்கள் தனித்தனியாக வந்து பார்த்து சந்தோஷப்படலாம். 

கோமாளிமேடை டீம் 





கருத்துகள்