ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

 



நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்







நூர்ஜெகான் சஃபியா நியாஸ் 
நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் 


நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். 

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். 


கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்கிறார்கள்? கல்வி கற்பது அவர்களின் அடிப்படை உரிமைதானே? பள்ளிகள் மாணவர்கள் எந்த மாதிரியான உடையை அணிந்துகொண்டு படிக்கவேண்டும் என்று விதிகளை விதிக்கலாம். ஆனால் அவர்கள் முறையாக உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவெடுக்காமல் எதற்கு உடைகளைப் பற்றி பேசுகிறார்கள்?

இதற்கு ஒரே அர்த்தம்தான் இருக்கமுடியும்? மக்களை மதரீதியாக பிரிக்க வேண்டும், அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி, சுவர் நோக்கி தள்ளி தனியாக நிறுத்தவேண்டும் என்பதே... 






உங்கள் பிஎம்எம்ஏ அமைப்பு கூட ஹிஜாப் அணிவை எதிர்க்கிறதே?

பெண்ணியவாதிகள் முகத்திரையை அணிவது ஆண்மைய சமூக அடையாளமாக பார்க்கிறார்கள். எனவே, அதனை முஸ்லீம் பெண்கள் அகற்றி விட்டு வெளியே வரவேண்டும் என நினைக்கிறார்கள். எங்கள் அமைப்பு அதனை முக்கியமானதாக கூறவில்லை. அதனை இஸ்லாம்  தனது அடையாளமாக கொண்டிருக்கிறது. முகத்திரை எப்படி இருக்கவேண்டும். எத்தனை செ.மீ. என்று இஸ்லாம் மத த்தில் கூறப்பட்டிருக்கவில்லை. ஒருவகையில் இப்படி உடை அணிவது மதத்தை முழுமையாக அறிந்துகொள்ள தடையாக இருக்கிறது. 

இஸ்லாம் மதத்தில் சமநிலை, உண்ணாநோன்பு, நீதியுணர்வு, ஞானம், பிரார்த்தனை என பலரும் அறியாத நிறைய விஷயங்கள் உள்ளன. இதில் காணாமல் போகிற அம்சமாக ஆன்மிகத்தன்மை, வானியல் சார்ந்த அறிவு ஆகியவற்றைக் கூறலாம். இதில் இஸ்லாமிற்கு எதிரான வலதுசாரிகளின் கூற்றுகள் எந்த விதத்திலும் முஸ்லீம் மக்களுக்கு உதவாது. 

இஸ்லாமிய எழுத்துகளை எப்படி படித்து புரிந்துகொள்கிறார்கள் என்பதே பிரச்னையாக உள்ளது. அதன் அடிப்படையில் இங்கு முத்தலாக் என்பதே இல்லை. ஆண்கள் ஒன்றுக்கு மேலான பெண்களை திருமணம் செய்வது பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் அவர்களை சமமாக பாவித்து நடத்த வேண்டும். அப்படி செய்யமுடியாதபோது ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஹிஜாப் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கவேண்டும் என்கிறீர்களா? திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது அல்லவா?

இஸ்லாம் மதம் வாழும் இடங்களைப் பொறுத்து பன்மைத்தன்மையைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுகுழந்தையைப் பார்த்தேன். மூன்று வயது இருக்கும். அதற்கு ஹிஜாப் அணிவித்திருந்தனர். இது அந்த குழந்தையின் தேர்வாக இருக்க முடியுமா? வீட்டில் உள்ள பெண்கள் உடையை அணிவதற்கான சுதந்திரத்தை பெற்றுள்ளனரா என்று தெரியவில்லை. 

இன்று விழாக்களுக்கு செல்லும்போது இளைஞர்கள், பெண்கள் என் அருகில் வந்து பேசுகிறார்கள். அவர்கள் எனது உடைத் தேர்வு பற்றி கேள்வி கேட்கிறார்கள். எனது தங்கை மும்பையில் முஸ்லீம் மக்கள் வாழுமிடத்தில் வாழ்கிறாள். அங்கு அவள் மட்டுமே சேலை கட்டுகிறாள். அங்குள்ளவர்கள் அவள் ஏன் சேலை கட்டுகிறாள் என  கேள்வியை கேட்கிறார்கள் என்று என்னை சந்தித்தபோது கூறினாள். 

முத்தலாக்கை எதிர்த்தபோது அது அமைப்பு ரீதியாக உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதா?

இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மத ரீதியான அமைப்புகள் எங்களை கடுமையாக விமர்சித்தனர். எதிராக நின்றார்கள். நிற்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் எங்களை ஆச்சரியப்படுத்தியது தாராளவாத பெண்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டவர்கள்தான். இவர்கள் மரபான முஸ்லீம்கள் பக்கம் நின்று ஆதரவு கொடுத்தார்கள். சப்னம் ஆஸ்மி போன்ற பிரபலம் பெண்களின் அடையாளம் என்று நிலைப்பாடு எடுத்தார். இந்த குழுக்கள் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக அடையாளம் கண்டு மனிதநேய அடிப்படையில் நெகிழ்வுடன் பார்க்க பழகுவது அவசியம். 







ஹிஜாப் பிரச்னையை பேசுவதன் வழியாக நிறைய உண்மையான பிரச்னைகளிலிருந்து நாம் விலகிவிடுகிறோம் என்று சொல்லுகிறீர்கள். அப்படியென்ன விஷயங்களை மறந்தோம், பார்க்கத் தவறினோம்?

கல்வி, வாழ்விடம் பற்றித்தான் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் பெண் கல்விக்கான உதவித்தொகை, அவர்களின் வேலைவாய்ப்புகளைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. பிற விஷயங்களை விட நாம் இதில் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். எங்கள் அமைப்பு, மும்பைக்கு அருகில் உள்ள இடத்தில் டே கேர் சென்டரை அமைத்துள்ளது. இதில் குழந்தைகளுக்கு பெற்றோர் குறைந்தளவு தொகையை அளித்தால் போதும். பெருந்தொற்று காலத்திலும் நாங்கள் முஸ்லீம் பெண்களுக்கு நிறைய உதவிகளை வழங்கினோம். 

தி இந்து ஆங்கிலம். 

நமிதா கோலி 



 

 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்