பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!












பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து!

வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம். 

விண்கல் தாக்குதல்

6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்கினால் உயிரினங்களை முழுவதுமாக  அழிக்க முடியும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. 

பிராணவாயு

25 லட்சம்  ஆண்டுகளுக்கு முன்னர், கிரேட் ஆக்சிடேஷன் ஈவன்ட் (Great Oxidation Event) எனும் நிகழ்ச்சியின் பிறகுதான், பிராணவாயு உருவானது. சயனோபாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் பரவிய பிறகுதான் பல்லுயிர்த்தன்மை என்ற சூழலே உருவானது. மனிதர்களும் உருவாகி பிராண வாயுவை சுவாசிக்க தொடங்கினர். 

45,000 கோடி ஆண்டுகளுக்கு முன்னர். பிராண வாயு உருவாவது திடீரென நின்றுபோக உயிர்கள் பலியாகத் தொடங்கின. ஆக்சிஜன் வளிமண்டலத்தில் குறைந்துபோனதே இதற்கு காரணம்.இக்காலத்தை ஆர்டோவிசியன் (Ordovician) என்று குறிப்பிடுகின்றனர்.  இக்காலத்தில் பெரும்பாலான உயிரினங்கள் நீரில்தான் வாழ்ந்தன. மெல்ல நிலத்தில் தாவரங்கள் முளைக்கத் தொடங்கிய காலமும் இதுதான். 

ஆக்சிஜன் குறைந்து உலகத்தை குளிர் ஆக்கிரமிக்க 80 சதவீத உயிரினங்கள் இதில் பலியாயின. இப்போது வெப்பமயமாதல் காரணமாக சூழலில் ஆக்சிஜன் குறைந்து வருகிறது. இதற்கு முதல் பலியாக கடல் உயிரினங்கள் பலியாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நேச்சர் கம்யூனிகேஷன் இதழில் கட்டுரை குறிப்பிடுகிறது. 

காமா கதிர்கள்

உலகம் திடீரென குளிர்ந்தது பற்றி படித்தோம். அதை தூண்டி ஊக்குவித்தது எதுவாக இருக்கும்? விண்வெளியில் வெளியான காமாக்கதிர்கள் (Gamma-ray burst) என வானியலாளர்கள் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.  காமா கதிர் வெடிப்பு காரணமாக பூமி தாக்கப்பட்டால், பத்து நொடிகள் போதும். சூரியனின் அபாயகர கதிர்களை தடுக்கும் ஓசோன் படலம் பாதிக்கும் மேல் அழிந்துவிடும். பிறகு, வெப்பம் காரணமாக கடலிலுள்ள ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் அழியும். உணவுச்சங்கிலி பாதிக்கப்பட , மிக எளிதாக பூமியிலுள்ள உயிரினங்கள் அழிந்துவிடும்.  

காமா கதிர்கள் வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனையும், நைட்ரஜனையும் உடைத்து பிரிக்கும். ஆக்சிஜனின் அளவு குறையத் தொடங்கும். நைட்ரஜன் ஆக்சைடு வாயுவின் அளவு பெருகும். மாசுபட்ட நகரங்களின் மீது  பனிபோன்று சூழும் வாயு இது. இந்த வாயு சூரியக்கதிர்களை முழுக்க தடுக்கத்தொடங்க, முழு உலகமும் ஐஸ் யுகத்திற்கு (Ice age) செல்லும். 

சூரியனின் இறுதி நாள்

சூரியனில் உள்ள ஆற்றல் தீர்ந்துவிட்டால், பூமியிலுள்ள தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடக்காது. வளிமண்டத்தில் தேவையான ஆக்சிஜனும் மெல்லக் குறையத்தொடங்கும். ஆக்சிஜனை நம்பியுள்ள உயிரினங்கள் அனைத்தும் பலியாகத் தொடங்கும். இதனை ஊக்குவிக்கும் பல்வேறு காரணிகளாக எடுத்துக்கொண்டால் இப்படிப்பட்ட காலகட்டம் வர  10 ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். 

தகவல்

discover january 2022

how will life on earth end

eric betz

கருத்துகள்