இந்தி மொழியை விட ஆங்கிலத்தில் நிறைய தகவல்கள் ஆதாரங்கள் உள்ளன! - எழுத்தாளர் கீதாஞ்சலி

 















கீதாஞ்சலி ஸ்ரீ
எழுத்தாளர்
டெய்ஸி ராக்வெல்
மொழிபெயர்ப்பாளர்

இவர் எழுதிய ரெட் சமாதி என்ற நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் பெயர், டாம்ப் ஆப் சாண்ட். இதனை டெய்ஸி ராக்வெல் என்ற பெண்மணி மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் தற்போது புக்கர் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தி நூல் ஒன்று, இப்பரிசு பட்டியலில் இடம்பெறுவது அரிதானது. 

கணவர் இறந்தபிறகு, மனைவி பாகிஸ்தான் செல்கிறார். தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை அடையாளம் காண்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி இப்படி கற்பனை செய்து எழுதினீர்கள்?

கீதாஞ்சலி -

இந்த நூலை எழுத எனக்கு ஏழு ஆண்டுகள் ஆனது. முதிய பெண் பற்றிய பிம்பம்தான் கதைக்கு முக்கியமானது. அவள் கணவரை இழந்திருக்கிறாள். இதுவரை அவள், குடும்பம், கணவன் என வாழ்ந்ததில் பிறர் சொல்லியே அவளது வாழ்க்கை நடந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக அவள் தனது வாழ்க்கை மீது கொண்ட ஆர்வத்தையே இழந்திருக்கிறாள். கணவரின் இறப்பு பெரும் விடுதலையை அடையாளம் காட்டுகிறது. இனி தன்னுடைய வாழ்க்கை புத்துணர்வு பெறவேண்டும் என நினைக்கிறாள். அதன் பொருட்டே எல்லைகளால் பிரிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் என இருநாடுகளைப் பார்க்கிறாள். பாகிஸ்தானுக்கு செல்கிறாள். 


பிரிவினை இலக்கியத்திற்கான தூண்டுதல் என்ன?

டெய்ஸி - 

பீஷம் சஹ்னி, மண்ட்டோ, கிருஷ்ண சோப்டி ஆகிய எழுத்தாளர்கள் பிரிவினை சார்ந்த இலக்கியங்களை எழுதியுள்ளனர். இவர்கள்தான் பிரிவினை இலக்கியங்களுக்கான முன்னோடிகள். நான் எடுத்த எழுதிய கதையில் பிரிவினை வருகிறது. எனவே, அதற்காக அண்மையில் நடந்த நிகழ்ச்சிகள், பிரிவினைகால சம்பவங்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். இது நாட்டின் எல்லைகள், மக்கள், பாலினம் என நிறைய எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இலக்கியம். 

கீதாஞ்சலி, நீங்கள் படித்தவர். ஆனால் இலக்கியத்தை இந்தியில் எழுதியதைப் பற்றி உங்கள் நண்பர்கள் என்ன கருத்து பகிர்ந்தார்கள்?

நான் ஆங்கிலத்திற்கு எதிரானவள் அல்ல. இந்தி மொழி என்பது காய்கறி விற்பவர்கள் முதல் வீட்டுவேலை செய்பவர்கள் வரை பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, நான் இம்மொழியைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கிலம் என்பது உயர்கல்வி முதல் ஏன் எனது வீட்டில் கூட அதில்தான் உரையாடுகிறோம் என்பதை நான் மறுக்கவில்லை. எனது தொடக்க கல்வி இந்தி மொழியில் அமைந்தது. நான், ஆங்கில மீடியத்தில்தான் கல்வி கற்றேன். இந்தி மொழியை அதிகம் பயன்படுத்தும்படியாக சூழல் எனக்கு தொடக்கத்தில் அமையவில்லை.

இந்தி இலக்கியம், ஆங்கிலம் என இரண்டுக்குமான உறவை எப்படி பார்க்கிறீர்கள்?

கீதாஞ்சலி

இந்தி மொழியை  விட ஆங்கில மொழியில் நிறைய விஷயங்கள் எளிதாக கிடைக்கின்றன. பல்வேறு மொழிகளைக் கொண்டதாக புத்தக திருவிழாக்களை நடத்த முயன்று வருகின்றனர். இந்தி மொழியைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது பற்றாக்குறையாகவும் கல்வி அறிவு இல்லாத மக்களைக் கொண்டதாகவும் உள்ளது. இந்தி இலக்கிய உலகம் என்பது சமமில்லாத தன்மையைக் கொண்டுள்ளது. இதனை ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு கூறுகிறேன். 

இந்திய மொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு வாசகர்களின் வரவேற்பு எப்படியிருக்கிறது.

கீதாஞ்சலி

ஆங்கில பதிப்பகங்கள் அனைத்துமே இந்திய மொழிகளிலும் தங்கள் நூல்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. மொழிகளுக்கு இடையில் பணியாற்றி மொழிபெயர்ப்புகளை செய்ய அதிக உழைப்பும் கவனமும் தேவைப்படுகிறது. 

இந்தி மொழி இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்? புக்கர் பரிசுக்கான பட்டியலில் இடம்பெறுவது எதையாவது மாற்றியிருக்கிறதா?

டெய்ஸி

ஆங்கிலத்தில் நேரடியாக எழுதுவது என்பது கவனிக்கப்படும் விஷயம். அதை நீங்கள் இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பெரியளவில் வரவேற்பில்லை என்பதே உண்மை. புக்கர் பரிசு பட்டியலுக்கான தேர்வு இந்திய மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பது பற்றிய கவனத்தை பலரிடமும் உருவாக்கியுள்ளது. தொடக்கத்தில் தெற்காசிய இலக்கியங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை . வெளிநாட்டு பதிப்பகங்கள் இந்தி மொழி நூல்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டி வருகிறார்கள். 


டைம்ஸ் ஆப் இந்தியா 

சோனம் ஜோஸி 




 








கருத்துகள்