கடல்பேச்சு- மீன்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ரகசியம்!

 








pinterest


நீருக்கடியில் மீன்களின் பேச்சு! 

கடலின் நீருக்கடியில் நீந்தும்போது, ஆய்வாளர்கள் பல்வேறு வித ஒலிகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவற்றை பல்வேறு உயிரினங்கள் ஏற்படுத்துகின்றன என நினைத்தனர்.  இந்த உயிரினங்களில் மீன்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.  

”பல்லாண்டுகளாக  சிலவகை மீன்கள் ஒலியை எழுப்பி வந்துள்ளன. ஆனால் இப்படி மீன்கள் ஒலியெழுப்பது அரிதான ஒன்று” என்றார்  அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஆரோன் ரைஸ். மீன்களின் தகவல் தொடர்பு எனும்போது பலரும் நினைப்பது அதன் உடல்மொழியும், தோல் நிறத்தின் வழியாக பிறருக்கு உணர்த்தும் குறிப்புகளும்தான். ஆனால் இவையல்லாமல் மீன்கள் பல்வேறு ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துள்ளன.  விலங்குகளும், பறவைகளும் இந்த முறையில் தகவல் தொடர்புகொள்வது பலரும் அறிந்த செய்தி தான். 

மீன்களைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் திமிங்கிலமும், டால்பினும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். உண்மையில் அதிகளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினம் என்றால், அது இவை இரண்டும்தான்.  பிற மீன் இனங்களின் தகவல்தொடர்பு பற்றி பெரியளவு ஆராய்ச்சி செய்யப்படவில்லை. 

பிற மீன்கள் எழுப்பும் ஒலியை ஆராய்ந்தபோது, அது கடற்புரங்களில் பயன்படும் ஃபாக்ஹார்ன் (foghorn) போன்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக்டினாப்டெரிஜி (Actinopterygii) என்ற அறிவியல் பெயர் கொண்ட மீன் இனங்கள், பற்களைக் கொண்டு ஒலி எழுப்புகின்றன. இவற்றுக்கு குரல் எழுப்ப தனி அமைப்பு இல்லை. 

175 மீன் இனங்களை ஆராய்ச்சி செய்ததில், மூன்றில் இருபங்கு மீன்கள் இப்படி தகவல் தொடர்புகொண்டுள்ளன. தொடக்கத்தில் ஐந்தில் ஒரு பங்கு மீன் இனங்கள் மட்டும் தகவல் தொடர்பு கொள்ளுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டனர். இதில் அதிகம் பேசும் மீன் இனங்களாக கேட்ஃபிஷ்(Cat fish), டோட்ஃபிஷ் (Toad fish) ஆகியவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வாழிடம், உணவு, எச்சரிக்கை, எல்லை சண்டை என நிறைய பிரச்னைகள் சார்ந்து தங்களுக்குள் உரையாடுகின்றன என ஆராய்ச்சியாளர் ரைஸ் குழுவினர்  கண்டறிந்துள்ளனர். 

தகவல்

Sciencealert.com

https://www.sciencealert.com/fish-have-been-talking-with-delightfully-strange-sounds-for-at-least-155-million-years?utm_source=ScienceAlert+-+Daily+Email+Updates&utm_campaign=f7365613c5-MAILCHIMP_EMAIL_CAMPAIGN&utm_medium=email&utm_term=0_fe5632fb09-f7365613c5-365477489

 

கருத்துகள்