ஆட்டிச குழந்தைகளின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வலைத்தளங்கள்!
சுவாமிநாதன் மணிவண்ணன் என்ற ஓவியக்கலைஞர் சென்னையில் உள்ளார். இவர் தனது ஏழு ஒவியங்களை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் தனது லெட்டர்ஹெட்டை விஸ்வநாதன் ஆனந்த் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் சுவாமிநாதன் மணிவண்ணன், ஆட்டிஸ பாதிப்பு கொண்டவர்.
சுவாமியின் படைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவிருக்கிறது. 36 வயதான சுவாமியின் படைப்புகள் 2018ஆம் ஆண்டு கொச்சி பினாலே நிகழ்ச்சியில் முதன்முதலாக இடம்பெற்றது.இப்போது ஆன்லைன் தளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதால் மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகள் எளிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஆட்டிஸ குழந்தைகள் தகவல் தொடர்பு கொள்வதில் தடுமாறினாலும் சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் கலை சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக வளருவார்கள் என்பதற்கு சுவாமி முக்கியமான உதாரணம்.
சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காக கலைகளை சொல்லித்தருவதற்காக திட்டங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, இங்கு மாலா சின்னப்பாவும் அவரின் குழுவும் உழைத்து வருகிறார்கள். எ பிரஷ் வித் ஆர்ட் என்பது இவர்களின் திட்டப்பெயர்.
குழந்தைகளுக்கான கலை செயல்பாடு நடக்கும் இடம், வாசு விஸ்வநாதன் என்ற கலைஞருக்கானது. இவரின் ஸ்டூடியோதான் குழந்தைகளுக்கான பயிற்சிக்கு பயன்படுகிறது. இதனை வாசு மாலா சின்னப்பாவின் குழுவுக்கு வழங்கியிருக்கிறார். தனது ஸ்டூடியோவில் ஆக்கப்பூர்வமான செயல்பாடு நடைபெற வேண்டும் என்ற காரணமே வாசுவை இப்படி முடிவெடுக்க வைத்துள்ளது.
இங்கு ஓவியங்களை வரையும் குழந்தைகள், சுதந்திரமாக எந்த அழுத்தமுமின்றி அதில் ஈடுபடுகிறார்கள். இதனால், வரையும் ஓவியங்கள் தனித்துவமாக உருவாகிவருகின்றன. இத்திட்டப்படி ஆன்லைனில் திருத்தங்களை செய்தபடி குழந்தைகள் வரையலாம். வரையும் ஓவியங்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. அதைப் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்து அதனை வாங்கிக்கொள்ளலாம். இப்படி வரையும் ஓவியங்கள், சோழமண்டலம் கிராமத்தில் கண்காட்சியாகவும் வைக்கப்படுகின்றன.
ஆன்லைனில் மோக்ஸி டேல்ஸ் என்ற வலைத்தளம் உள்ளது. இதில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.இதை நடத்தும் மோக்ஷா குமார் சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறப்புக்குழந்தைகளின் இரண்டு ஓவியங்களை வாங்கினார். மேலும் அவர்களின் ஓவியங்களை தனது வலைத்தளத்திலும் பதிவிட்டு காட்சிபடுத்தியுள்ளார். மோக்ஷா குமார் சென்னையைச் சேர்ந்தவர்.
அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது கைராசி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், சிறப்புக் குழந்தைகளுக்கு ஓவியங்களைக் கற்றுக்கொடுப்பதோடு அவர்களின் படைப்புகளை காட்சிபடுத்தவும் உதவுகின்றனர்.
எ டைப்பிகல் அட்வான்டேஜ் என்ற வலைத்தளம், மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது. 19 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளில் இந்த வலைத்தளத்தில் பார்க்கலாம். மொத்தம் 125 படைப்பாளிகள் இந்த வலைத்தளத்தின் தொடர்பில் உள்ளனர். இதை நடத்தும் வினித்திற்கு 10 சதவீத பார்வைத்திறன் தான் உள்ளது. இவரால் கலைப்படைப்பை பார்க்க முடியாது. இவர் தான் விற்கும் ஓவியங்கள் தரம், கலைத்திறன் சார்ந்து வாங்கப்படவேண்டும் என நினைக்கிறார். பரிதாபப்பட்டு பிறர் ஓவியங்களை வாங்குவதை அவசியமில்லை என்கிறார். 2020ஆம் ஆண்டு வலைத்தளத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்ட் சான்க்சுவரி என்ற நிறுவனம், மூளை வாத குறைபாடு கொண்ட குழந்தைகளின் கலைப்படைப்புகளை காட்சிபடுத்துகிறது. இதனை ஷாலினி குப்தா என்பவர் நடத்துகிறார். இவருக்கு 500 கலைஞர்களிடம் தொழில்ரீதியான தொடர்புள்ளது. வலைத்தளத்தில் பல்வேறு போட்டிகளையும் நடத்தி வருகிறார். பதினாறு வயதைக் கடந்த சிறப்புக் குழந்தைகளை இத்தளத்தில் படைப்புகளை வழங்க வரவேற்கிறார். இந்த வயதிற்கு மேல்தான் சிறப்புக்குழந்தைகள் உலகின் சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும். அதற்கு நாங்கள் உதவுகிறோம் என சொல்கிறார் ஷாலினி.
https://www.theartsanctuary.in/
https://www.facebook.com/kairassi/
https://www.kairassi.com/?fbclid=IwAR0biyvaOao5aa1gZO-dVR6NApwBdjNAZ7oxu180Pq3Kj_X11m2FovfG3lM
காமினி மாத்தாய்
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக