கோவையின் குப்பைகளை மாற்றி சுத்தம் செய்யும் செர்கிள் எக்ஸ் ஸ்டார்ட்அப் குழு!

 





கோயம்புத்தூர் தொழில்நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் வாய்ப்புகளை ஈர்க்கும் முக்கியமான நகரம் கூட. இங்கு தினசரி குவியும் கழிவுகளின் எண்ணிக்கை அதிகம். இதனை எப்படி மறுசுழற்சி செய்வது என பலரும் யோசித்து வந்தனர். தற்போது இதற்காகவே செர்கிள் எக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த நிறுவனம், கோவை கார்ப்பரேஷன் மற்றும் ரெசிடென்ஸ் அவர்னெஸ் அசோசியேஷன்  - ராக் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 

இவர்கள் குறிப்பிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதனை சுத்தம் செய்து அங்கு சுவரோவியங்களை வரைகிறார்கள். இப்படித்தான் ஆர்எஸ் புரத்தில் உள்ள ஜிஎஸ் லே அவுட்டில் சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை எழுதி அழகிய படங்களை வரைந்திருந்தனர். இதற்கு ஸ்பாட் பியூட்டிஃபிகேஷன் என்று பெயர். 


cercle x team


பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாசுபட்ட இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை தன்னார்வலர்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள். பிறகு அவர்களை ஒருங்கிணைத்தால் பாதி வேலை முடிந்துவிடுகிறது. செர்கிள் எக்ஸ் என கழிவு மேலாண்மை நிறுவனம் கழிவுகளை மீண்டும் சுத்தப்படுத்திய இடத்தில் யாரும் போடாமலிருக்கும்படி, பார்த்துக்கொள்கிறார்கள். பொதுவாக யாரும் தங்காத வீடு இருந்தால் மக்கள் அதுதான் தற்காலிக குப்பை கொட்டும் இடம் என குப்பைகளை கொட்டத் தொடங்கிவிடுவார்கள். ஜிஆர்டி லே அவுட் என்ற இடத்திலும் அப்படித்தான் நடந்தது. இப்போது அந்த இடத்தை சுத்தப்படுத்தி, மக்கள் உட்கார ஸ்லாப் கற்களை போட்டிருக்கிறார்கள். மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் இந்த இடத்தை சாலையோரப் பூங்காவாக்கவும் திட்டமிருக்கிறது. 

நல்ல முயற்சியே நல்ல தொடக்கம்தானே?

TNIE

R kirubakaran


https://cerclesolutions.com/#content

கருத்துகள்