இடுகைகள்

மார்க்கெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாவரும் ஏமாளி - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  ஒரு வாரத்தில் எத்தனை முறை உங்கள் பர்சைத் திறக்கிறீர்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதனால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிறீர்கள், எதனால் ஒரு பொருளை வாங்கவேண்டுமென தோன்றுகிறது ஆகிய கேள்விகளுக்கு பின்னால் உள்ள உளவியல் விஷயங்களை நூல் பேசுகிறது. எப்படி பெருநிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். மக்களை பெருமளவு செலவு செய்ய வைக்க என்னென்ன உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை யாவரும் ஏமாளி நூல் வெளிப்படுத்துகிறது.  நூலை கீழுள்ள முகவரியில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.com/dp/B0C3CBVYNP

மார்க்கெட்டுக்கு புதுசு - க்யூபோ கிம்பல், அடிடாஸ் ஷூ, ஆம்பிரேன் பவர்பேங்க்

படம்
  க்யூபோ ஹேண்ட்ஹெல்ட் கிம்பல் விலை 6,990 மட்டுமே இதுபோன்ற கருவிகளின் தாயகம் சீனாதான். க்யூபோவை தயாரித்து நமக்கு அளிப்பது ஹீரோ எலக்ட்ரானிக்ஸ். கருவியை க்யூபோபுரோ ஆப் மூலம் இயக்கலாம். இந்த போனை வைத்து மயக்கும் யூட்யூப் வீடியோக்களை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றை சுட்டுத் தள்ளலாம்.. ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் வைத்துள்ள போன் கொஞ்சம் லைட்டாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஆப்பிள் 14 பயன்படுத்துகிறீர்கள் என்றால், க்யூபோ கிம்பலை பயன்படுத்தினால் வீடியோ சற்று தடுமாறும். ஏனெனின் அந்த போனின் எடைக்கும், க்யூபோவின் ஸ்டாமினாவுக்கும் சற்று பிரச்னை உள்ளது. வட்டவடிவில் பட்டன்கள், வீடியோவுக்கு பட்டனை சற்று நீளமாக அழுத்தினால் போதுமானது. யூஎஸ்பி வடிவில் கிம்பலை சார்ஜ் செய்துகொள்ளும் அமைப்பு உள்ளது. 5வி 2ஏ அடாப்டரை பயன்படுத்தினால் எளிதாக சார்ஜ் செய்துகொள்ளலாம். பவர் பட்டனை அழுத்தினாலே போர்ட்ரைட், லேண்ட்ஸ்கேப் என படமாக்கும் விதத்தை  மாற்றி ஸ்விட்ச் செய்துகொள்ளலாம். பொருட்களை, முகத்தை எளிதாக ட்ராக் செய்ய முடிகிறது. மீதியெல்லாம் நீங்கள் வாங்கி ஆராய்ச்சி செய்துகொள்ளுங்கள். குறைந்த பட்ஜெட்டில் நிறைய வசத

பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்! - வாங்கும் பழக்கத்தை ட்யூன் பண்ணுங்க!

படம்
  உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை எதிர்கொள்ள என்ன செய்வது என நாம் நிர்மலா சீதாராமனிடம் அட்வைஸ் கேட்க முடியாது. அட்வைஸ் கேட்கிறாயே அதற்கென தனி ஜிஎஸ்டி போட்டுவிடுகிறேன் என்று கூட உத்தரவிடலாம்.  திட்டமிடுங்கள்  ஆன்லைனோ, இன் ஸ்டோரோ எதுவாக இருந்தாலும் ஆஃபர் உள்ள பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம், புரமோட்டர்கள் உங்களை கடைகளுக்கு சென்று துரத்தி பொருட்களை வாங்க வைக்க முயல்வார்கள். அவர்கள் பொருட்களை திருடும் காக்கைகளைப் போல கை தூக்கி விரட்டி விட்டு எதற்கு கடைக்கு வந்தீர்களோ அந்த வேலையைப் பாருங்கள். அதுதான் வாழ்க்கை வளம் சேர்க்கும்.  சூப்பர் மார்க்கெட்டோ, ஹைப்பர் மார்க்கெட்டோ எதுவாக இருந்தாலும் வாங்க வேண்டிய பொருட்களை நீங்கள் பட்டியல் போட்டபின்னரே கடைக்கு போகவேண்டும். அப்படி போகாதபோது பர்சிலுள்ள பணம் வெட்டியாக செலவாகும்  பிராண்டிற்கு மாற்று  இதுவரை பிராண்டுகளை வாங்க நிறைய செலவு செய்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது. எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள கம்பெனியின் சுயமான மா

மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

படம்
  ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு ஐஸ்வர்யா ரெட்டி நிறுவனர், கென்சு ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.  உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன? எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.  நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன்.  தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன? பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திற