இடுகைகள்

தூய்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் செய்திகள்- ஊழியர்களுக்கு சைக்கிள் கொடுத்த நிறுவனம், கடற்புரத்தை சுத்தம் செய்யும் மனிதர்!

படம்
  pixabay சூழல் செய்திகள் முட்டுக்காடு சூழல் காப்பாளர்! முட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர், கிரேஷியன் மேத்யூ கோவியாஸ். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கடற்கரையில் அலைகள் கொண்டு வந்து போடும் குப்பைகளை பொறுக்கி தனியாக அதனை ஒரு இடத்தில் போட்டு வருகிறார். இதன்மூலம் சூழலுக்கான ஆபத்து தவிர்க்கப்படுகிறது.  கடல் அலையில் ஒதுக்கப்படும் மரப்பொருட்களை இவர் புகைமூட்டம் போட எடுத்துச்செல்கிறார். மரம் உப்பில் ஊறி விட்டால் அதனை எளிதாக விறகாக பயன்படுத்த முடியாது. ஆனால் அதில் நிறைய புகை வரும். அதனை வைத்து தான் வாழும் வீட்டில் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட பயன்படுத்திக்கொள்கிறார். வீட்டில் இருந்து கடற்கரைக்குப் போகும்போதே அலுமினிய கண்டெய்னர் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அதில், கடற்கரையோரம் அலை ஒதுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கிறார். இப்படித்தான் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலைக் கெடுக்காமல் அதனை அப்புறப்படுத்தி வருகிறார்.  அனைவருக்கும் சைக்கிள் இப்படி கூறுவதற்கு இது அரசு திட்டமல்ல. மணலியில் செயல்படும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சைக்கிள்களை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிற...

டென்னிசியிலுள்ள ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவன்! - கேஷ் டேனியல்ஸ்

படம்
  ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவனின் தன்னார்வம்!  அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் அமைந்துள்ளது சட்டனூகா என்ற நகரம். இங்குதான், கேஷ் டேனியல்ஸ் என்ற சிறுவன், தன் பெற்றோரோடு வாழ்கிறான். இவன், வாரம்தோறும் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்று, அங்கு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வது வழக்கம். தூய்மைப் பணிகளைச் செய்யும்போது, கிடைக்கும் வினோதமான பொருட்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறான்.  ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் தனது வயதையொத்த நண்பர்களையும் இணைத்துக் கொண்டுள்ளான். இதுவரை, 1000 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை அகற்றியுள்ளான் டேனியல்ஸ். ஆற்றில் குப்பையாக வருபவற்றில் அதிகம் குளிர்பான கேன்களே அதிகம். இந்த வகையில் வாரத்திற்கு ஆயிரம் கேன்களை அகற்றுகிறார்கள்.  கடந்த ஜனவரி மாதம், டேனியல்ஸ் தனது தோழி எல்லா கிரேஸூடன் சேர்ந்து கிளீன்அப் கிட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளான்.  இதில் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவர்கள், தங்களது பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பெருமளவு அகற்ற வேண்டும் என்பதே அமைப்பின் லட்சியம்.  ஆழ்கடலில் நீச்சல...

குடிநீருக்கு காலாவதி நாட்கள் தேவையா?

படம்
குடிநீர் பாட்டில்களுக்கு எக்ஸ்பைரி நாள் இருக்கிறது அது தேவையா? சர்க்கரை உப்புக்கு காலாவதி நாட்கள் உண்டு. ஆனால் அதைப் பார்த்துத்தான் நீங்கள் அதனை பயன்படுத்துகிறீர்களா கிடையாது. காரணம், விற்பனைக்கு வைக்கும் பொருட்களில் கண்டிப்பாக காலாவதி நாட்களை அச்சிடவேண்டும் என்பது அரசு விதி. ஆனால் குடிநீர் பாட்டில்களில் இரண்டு மாதங்கள் என அச்சிட்டிருப்பார்கள். அது முக்கியமானது அல்ல. அந்த நீரை சரிபார்த்துவிட்டு குடிக்கலாம். இமாலயத்திலிருந்து வந்த குடிநீர் என விளம்பரம் செய்வார்கள். ஆனால் குடிநீர் தயாரிப்பு மையங்களும் ஒரே மாதிரி மெஷின்களை வைத்துத்தான் குடிநீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைக்கிறார்கள். சுவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறியிருந்தால் அதனைக் குறித்து நீங்கள் நிறுவனத்திற்கு புகார் கொடுக்கலாம். மற்றபடி சுவையைப் பார்த்து நீரைக் குடிக்கலாம். காலாவதியை பெரிதாக கண்டுகொள்ளாதீர்கள். நன்றி: லிவ் சயின்ஸ் 

99.9 சதவீதம் கிருமிகளை அழிக்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி 99 சதவீத கிருமிகளை கொல்வோம் என கழிவறை கிருமிக்கொல்லி நிறுவனங்கள் கூறுகின்றன. அப்போது மீதியுள்ள 1 சதவீத கிருமிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா? 99 சதவீத தூய்மை, பாக்டீரியாக்களைக் கொல்கிறோம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமானது. லேபில் செய்யும் ஆய்வு அடிப்படையில் 99 சதவீதம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வியாபாரத்திற்கான ஐடியா. மற்றபடி உங்கள் குடலை அல்லது தரையை 99.9 சதவீதம் துடைப்பதால் என்ன ஆகப்போகிறது.  நோய் எதிர்ப்பு சக்தி திடமாக இருந்தால், பாக்டீரியா, பூஞ்சைகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனவே, ஒரு சதவீதம் மட்டுமல்ல; 99.9 சதவீத கிருமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  செய்தி, படம் - பிபிசி