99.9 சதவீதம் கிருமிகளை அழிக்க முடியுமா?
99 சதவீத கிருமிகளை கொல்வோம் என கழிவறை கிருமிக்கொல்லி நிறுவனங்கள் கூறுகின்றன. அப்போது மீதியுள்ள 1 சதவீத கிருமிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?
99 சதவீத தூய்மை, பாக்டீரியாக்களைக் கொல்கிறோம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமானது. லேபில் செய்யும் ஆய்வு அடிப்படையில் 99 சதவீதம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வியாபாரத்திற்கான ஐடியா. மற்றபடி உங்கள் குடலை அல்லது தரையை 99.9 சதவீதம் துடைப்பதால் என்ன ஆகப்போகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி திடமாக இருந்தால், பாக்டீரியா, பூஞ்சைகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனவே, ஒரு சதவீதம் மட்டுமல்ல; 99.9 சதவீத கிருமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
செய்தி, படம் - பிபிசி