இந்தியாவின் ராக்கெட்டுகள் முன்னேறுவது அவசியம்!





Image result for falcon 9


எலன் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட், 28 டன்கள் பேலோடுகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம்தான் நாசா, விண்வெளி வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பவிருக்கிறது.

ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் மிக மெதுவாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ பாகுபலி என அழைக்கும் ஜிஎஸ்எல்வி எட்டு டன்களை மட்டுமே விண்ணுக்கு கொண்டு செல்லும் திறன் உடையது. இதனை வைத்துக்கொண்டு எப்படி 2022 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்புவீர்கள். இதே கேள்வியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், நடுப்பக்க கட்டுரையில் எழுப்பியிருந்தார்.

நிலவு கடந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை கோருகிறது. ஆனால் இந்தியாவிடம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி தாண்டி வேறெதுவும் சாத்தியமான ராக்கெட்டுகள் இல்லை.

2008 ஆம் ஆண்டு இலகுவான பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1380 கி.கிதான். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரயான் 2, 3,850 கி.கி எடையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி எனும் ராக்கெட்டுகளை இஸ்ரோ ஆட்களே கடலில் விழுவதற்காக தயாரிக்கப்பட்டவை என்று கிண்டலடித்த காலமும் உண்டு. அப்படி ஏவிய சில நொடிகளில் நேரே கடலுக்குள் வாலா போட்டு சங்கமமான ராக்கெட்டுகளிலிருந்துதான் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய வெற்றிகரமான ராக்கெட்டுகள் உருவாயின.

இப்போதைக்கு ஜிஎஸ்எல்வி எம்கே 3 மட்டுமே, இஸ்ரோவிலிருக்கும் ஒரே உருப்படியான ராக்கெட். கிரையோஜெனிக் எஞ்சினை தன் எதிர்காலமாக இஸ்ரோ கருதுகிறது. அமெரிக்காவிலுள்ள ஸ்பேக்ஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் 23 ஆயிரம் கி.கி.,எடையை தூக்கும் வலிமை உடையது. இதில் ஹெவி எனும் ராக்கெட் 64 ஆயிரம் கி.கி எடையை தூக்கிச்செல்லும் திறன் கொண்டது. பிரான்சின் அரியனே -5, 21 ஆயிரம் கி.கி எடையைத் தூக்கிச்செல்லும் திறன் கொண்டது.

நம்பிக்கை தளரவேண்டியதில்லை. ஜிஎஸ்எல்வி 2017 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது , குறுகிய காலத்தில் 400 கி.கி. எடையை கூடுதலாக  தூக்கிச்செல்லும் திறன்கொண்டது. இதனை மேலும் கூடுதலாக 500 கி.கி. எடை கொண்டதாக தூக்கிச்செல்லும் திறன் கொண்டதாக மாற்றவிருக்கிறோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நன்றி: டைம்ஸ் - சேத்தன் குமார்