சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்
சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன் வணிக ரீதியான போட்டியை, தொழில் சார்ந்து நிறுவனங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். போட்டியை சமாளிக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். கரிம எரிபொருள் வாகனமோ, மின் வாகனமோ புதுமைகளை புகுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கு குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய சீன மின் வாகனங்களை ஐரோப்பிய கமிஷன் முப்பத்து மூன்று சதவீத வரியை விதித்து தடுக்க முயல்கிறது. குறிப்பாக அவர்களது இலக்கு, பைடு என்ற சீன மின் வாகன நிறுவனம்தான். இந்த நிறுவனம், மின்வாகனங்களை டெஸ்லாவை விட தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வருகிறது. இதைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டுக்கான கார்பன் வெளியீட்டு இலக்கைக் கூட ஐரோப்பிய கமிஷன் அடையமுடியும். பதிலாக, சீனாவின் மின்வாகன இறக்குமதிக்கு அதிக வரியை விதித்து அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. இந்த வரி விதிப்பிற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பைடு, ஜீலி ஆகியவற்றோடு வெளிநாட்டு நிறுவனங்களான டெஸ்லா கூட மின் வ...