சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025

 சிறந்த கண்டுபிடிப்புகள் - டைம் வார இதழ் 2025


ப்ரெய்லி டேப்லெட் 


அமெரிக்காவில் ப்ரெய்லி முறையில் படிக்க டேப்லெட் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான நூல்களை எளிதாக உருவாக்கிவிட முடிவதில்லை. இதற்கு காரணம், அனைத்தையும் ப்ரெய்லி முறையில் உருவாக்கும் செயல்முறை கடினமாக உள்ளதுதான். அதைத்தான் இப்போது மாற்றியுள்ளனர். இந்த டேப்லெட்டில் எளிதாக ஒருவர் வாசிக்க முடியும். கிரேக் ஸ்டில்சன் என்பவர் இதை தயாரித்து உதவியுள்ளார். லீகோ விளையாட்டை அறிவீர்களா, அந்த முறையில் இந்த கருவியை அமைத்துள்ளனர். இப்போதைக்கு இதை 1,100 பிளாக்குகளுடன் வகுப்பறையில் பயன்படுத்தும்படி அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடலாம். அமெரிக்காவில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இருபது சதவீதம் பேர் இதனால் பயன்பெறமுடியும். 


மோதிர ரிமோட்


ஊரில் சிலர் தனியார் பேருந்துகளில் போகும்போது தங்களுடை நவீன போனை ரிமோட்டாக பயன்படுத்தி பேருந்திலுள்ள சிடி டிவிடி பிளேயரை நிறுத்துவது, பாடலை மாற்றுவது ஆகிய குறும்புகளை செய்வதுண்டு. அதேதான். தாவல் படேல் என்ன செய்திருக்கிறார் என்றால், அந்த ரிமோட்டை விரலுக்கு மாற்றியிருக்கிறார். இதைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் வீட்டில் அனைத்து பொருட்களையும் டிஜிட்டலாக பயன்படுத்தும்படி மாற்றியிருக்க வேண்டும். மோதிரத்தை அணிந்து விரலை நீட்டினால் போதும் விளக்கு எரியும், டிவி ஓடும். மோதிரத்தை வைத்து சேனலை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அதை ஆன் செய்ய முடியுமாம். விளக்குகளை எரிய வைக்கலாம். யுனிவர்சல் ரிமோட். எளிமையாக புரிந்துகொள்ளலாம். ஆப்பிள் எஞ்சினியரான தாவலுக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். தாவலுக்கு இன்னொன்றை கூறவேண்டும். சீனாவில் ஹூவெய் நிறுவனம், கைகளை சைகை போல காட்டினாலே கார்களை இயங்கும்படி தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்துவிட்டது. 


ஆரா ரிங் 4


பின்லாந்து நாட்டு கம்பெனியின் மோதிரம். இதை வாங்கி அணிந்தால், உங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு, நுரையீரல் செயல்பாடு என பலதையும் ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்கும். அதை எடுத்துப் பார்த்து பதறி மருத்துவமனைக்கு சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதாவது, நோய்களை முன்னரே அறிந்து பத்திரமாக இருக்கலாம். அம்புட்டுத்தான். இதில் சந்தா செலுத்தும் வசதியும் உண்டு. அதை நீங்கள் காசு கட்டி வாங்கி இணைந்தால் சிம்டம் ரேடார் என்ற வசதி புதிதாக சேரும். இதை வைத்து உங்களுக்கு வரும் காய்ச்சல், சளியைக்கூட முன்னரே அறியலாம். 


தூக்கத்தை அளவிடும் புஜப்பட்டை


தமிழில் எழுதியதால் அப்படி இருக்கிறது. ஆர்ம் பேண்ட் என்று ஆங்கிலத்தில் சொன்னால் நவீனமாக தோன்றுகிறது அல்லவா? அவ்வளவேதான். தூக்கத்தை அளவிடும் கருவிகளில் இதுவும் ஒன்று. இதை,புஜத்தில் கட்டிக்கொண்டால் போதும். தூக்கம் பற்றிய தகவல்களை சேகரித்து போனிலுள்ள ஆப்புக்கு அனுப்பிவிடும். அதை வைத்து தூக்கம் சரியாக இருக்கிறதா என அடையாளம் காணலாம். கூடுதலாக இதயம், நுரையீரல், மூச்சு எண்ணிக்கை, ஆகியவற்றின் தரத்தையும் அறியலாம். இதில் அலாரமும் உண்டு. அலாரம் அதிர்வாக ஒலிக்கும். கார்மின் நிறுவனம் தயாரித்துள்ளது. இணையத்தில் இதை நீங்கள் தேடிப்பார்க்கலாம். ஓஸ்லோ ஸ்லீப்பட்ஸ் கூட இந்த வகையில் சிறப்பானது. அதை ப்ளூடூத்தில் இணைத்துவிட்டு காதில் மாட்டிக்கொண்டு தூங்க வேண்டும். இதை அனைவரும் விரும்புவார்களா என்று தெரியவில்லை. தூக்க குறைபாடு உள்ளவர்கள் இதை தேர்வு செய்யலாம். 


நியூரோ விஜில் ஐபிரெயின்


மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங், நியூரோவிகில் கருவியின் மாதிரியைப் பயன்படுத்திப் பார்த்தார். நியூரோவிஜில் ஐபிரெய்ன் என்பது, மூளையைக் கண்காணிக்கும் போர்ட்டபிள் கருவி. பார்க்கின்சன், புற்றுநோய் வந்த நோயாளிகளை இக்கருவி மூலம் கண்காணித்து தகவல்களைப் பெறலாம். நோவர்டிஸ், ரோசே ஆகிய இரு மருத்துவ நிறுவனங்கள், ஆராய்ச்சிக்கான நிதியை வழங்குகின்றன. இந்த ஆராய்ச்சியில் ஏஐயை உள்ளே நுழைத்து செயல்பட்டு வருகிறார் பிலிப் லோ. இவரது தந்தை, இறப்பே மூளையைக் கண்காணிப்பு கருவிக்கான வித்து. 




தொகுப்பு - தென்னன்


மூலம் 

டைம் வார இதழ் - கிறிஸ் டோல்கல் வாக்கர்,மேட் ஆல்டர்டன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?