இடுகைகள்

பால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்  நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.  மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...

இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!

படம்
    இசைக்கலைஞர் பார்வதி பால் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார். முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்? 1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணு...

ஸ்கிம்டு பாலில் உள்ள சர்க்கரை அளவு, பூமியிலுள்ள தனிநபருக்கான நீரின் அளவு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
               அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ஆடை நீக்கிய பாலில் எத்தனை கிராம் சர்க்கரை இருக்கும்? ஆடை நீக்கிய பால், ஆரோக்கியமானது. இதில் கால்சியம் உள்ளது. இச்சத்து, உடலிலுள்ள எலும்பு, பற்களுக்கு நல்லது என கூறப்படுகிறது. கொழுப்பு குறைவு என்பதால், இதை டயட்டை கடைபிடிப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதில் பலரும் மறந்துவிடுவது, சேர்க்கப்பட்டிருக்கும் பத்து கிராம் சர்க்கரை பற்றி.... ஒரு கிளாஸ் பாலில் பத்து கிராம் சர்க்கரை உள்ளது. பாலில் சேர்த்து உண்ணும் உணவுகள், பிரெட், சூப் ஆகியவற்றில் சர்க்கரை மறைவாக உள்ளது. இதையும் ஒருவர் கவனமாக பரிசீலித்து உணவுமுறைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மூத்திஸ் என பழங்களில் செய்து விற்கப்படும் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம். எந்தளவு என்றால் கார்பன்டை ஆக்சைடு கரைக்கப்பட்ட கோலாக்களை விட அதிகம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதை பழரசமாக மாற்றி பதப்படுத்தி குடிப்பதில் நார்ச்சத்து இருக்காது. ஆனால் சர்க்கரை அதிகம் இருக்கும். வாழைப்பழம், மாம்பழம், திராட்சை ஆகியவற்றில் சர்க்கரை அளவு அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க...

அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு!

படம்
                அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு! உலகில் சைவம், அசைவம் என்பதெல்லாம் வியாபாரத்திற்கு உண்டான சமாச்சாரங்கள். உணவைச் சாப்பிடும் மக்கள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது கிடையாது. பசிக்கு சாப்பிடும் உணவு கூட இன்று அரசியல்மயமாகி சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படும் அளவில் உள்ளது. உண்மையில் இந்தியாவில் சைவம் சாப்பிடும் பழக்கம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இங்கு தீவிர சைவம் என்றால் பருப்பு, காய்கறிகள், பழங்கள் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டுவிடுகிறோம். சிலர் சைவத்தில் பால், முட்டை இன்னும் பல பொருட்களை சேர்த்து அதற்காக விவாதம் செய்யவும் முயல்கிறார்கள். தீவிர சைவத்தில் பாலை சேர்க்க முடியாது. பால், விலங்கிடமிருந்து பெறும் பொருள். எனவே, அதை தீவிர சைவ பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தமுடியாது. ஆனால், அனுபவ அடிப்படையில் ஒருவர் பாலை தனது உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார். அண்மையில் இந்திய மாநிலங்களில் கிராம...

கேனில் அடைக்கப்பட்ட உணவு கெட்டதா? - உண்மையா - உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை விட அவ்வப்போது சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதே சிறப்பு.  உண்மை அதெல்லாம் காசு கொட்டிக்கிடப்பவர்களுக்கு சரி. சாதாரண ஏழை மக்களுக்கு சரிபடாது. கேனில் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைந்த விலைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். சந்தையில் விற்கும் பழங்கள், காய்கறிகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அந்தந்த நேரத்தில் வாங்குவது அனைவருக்கும் முடியாது. சத்துகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. புதிதாக பறித்து விற்கப்படும் காய்கறி, பழங்களைப் போவே கேனில் அடைக்கப்பட்ட பழங்களும் இருக்கும். சத்துகள் பெரிதாக இழக்கப்படாது. அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படு்ம் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சோதித்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது.  கொழுப்பு என்றாலே கெட்டதுதான். உண்மை 1940ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ஆபத்து. கொழுப்பு குறைவான உணவுமுறை இதய நோய்களை குறைக்கும் என ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 1980ஆம் ஆண்டு கொழுப்பு குறைவான உணவுமுறை மக்கள் அனைவருக்குமே நல்லது. இதய...

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணம...

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் த...

துரத்தும் துரோக சதிவலையில் மாட்டிக்கொள்ளும் இளவரசன் பால்! - டுயூன் 2021

படம்
  டுயூன் ஆங்கிலம் ஆங்கிலத் திரைப்படம். ஹாலிவுட்டில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படம். இதனை நவீன தொழில்நுட்பத்தில் வினோதமான பல்வேறு பொருட்களை வைத்து பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.  என்ன கதை? இதுவேறுவகையான உலகம். இப்போது உலகம் என்பது விண்வெளியில் தான் உள்ளது. அங்குள்ள பல்வேறு உலகங்களை கட்டுப்படுத்துவது பேரரசர். அவருக்கு கீழே உள்ள கப்பம் கட்டும் சிற்றரசர்கள் பலர் உண்டு. அதில் புகழ்பெற்றது, அட்ரெய்டஸ். இதற்கு எதிரி பாரோன்.  பாரோன், பல்வேறு ஆண்டுகளாக அதாவது எண்பது ஆண்டுகளாக அராக்கிஸ் எனும் பாலைவனத்தை கைக்குள் வைத்து ஆள்கிறார்கள். அங்குள்ள ஸ்பைஸ் எனும் கனிம வளமே முக்கியமான காரணம். ஆனால் திடீரென பேரரசர், அந்த பாலைவனம் இனி அட்ரெய்டஸிற்கு சொந்தம். பாரோன் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கூறிவிடுகிறார். இதனால் அங்கு அட்ரெய்டஸ் அரச குடும்பமும், ராணுவமும் செல்கிறது. ஆனால் அது அட்ரெய்டஸ் குடும்பத்தை அழிக்க பேரரசர் விரிக்கும் வலை. சதித்திட்டம் என்பதை அட்ரெய்டஸ் அரசர் டியூக் அறிவதில்லை. அறிந்தாலும் சொல்லாமல் இருக்கிறார் என கொள்ளலாம்.  அவருக்கு ஒரே நம்பிக்கை அவரது மகன் பால்...

பதப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்து 160 ஆண்டுகள்!

படம்
  லூயிஸ் பாஸ்டர் அமுல் தாஸா என்ற பால் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது. 200 மி.லி. பதினைந்து ரூபாய்தான். இதனை காய்ச்சாமலேயே கடையில் வாங்கியவுடனே குடிக்கலாம். மொத்தம் 180 நாட்கள் கெடாது என கம்பெனியினர் சொல்லுகிறார்கள். எப்படி இந்த செயல்பாடு சாத்தியமானது.?  பதப்படுத்துதல்தான். அதன் முன்னேற்றம்தான் இந்த சாதனைக்கு காரணம். பாலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லவே அதனை கொதிக்க வைக்கிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாலை கொதிக்க வேண்டுமென யாருக்கும் தெரியாது.  பாலை 60 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை கண்டுபிடித்தவர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பாஸ்டர். இவர், 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். ஈகோல் நார்மலே சுப்பீரியர் எனும் இடத்தில் படித்தார். படித்து முடித்து தொடக்க பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.  1856ஆம் ஆண்டு லூயிஸைப் பார்க்க, உள்ளூர் மனிதர் ஒருவர் வந்தார். அவர் தான் தயாரித்த பீட்ரூட் ஜூஸ்  கெட்டுப்போனதைப் பற்றி சொன்னார். அத...

ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....

படம்
  பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.   அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.  இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில்  நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான்.  இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்று...

நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடனே போராடும் போராட்டம்! - ஒவ்வாமை எப்படி ஏற்படுகிறது?

படம்
        அலர்ஜி என பொதுவாக அனைவரும் சொல்வது இதைத்தான் . தூய தமிழில் இதனை ஒவ்வாமை என்று கூறலாம் . சாதாரணமாக பார்த்தால் தோல் சிவப்பது , கொப்புளஙகள் ஏற்படுவது , அதில் சீழும் ரத்தமும் கலந்து வருவது , பிறகு இதுவே தீவிரமானால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரும் கூட போகலாம் . இதனை மருத்துவ முறையில் பார்த்தால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொருட்களுக்குமான போர் என்று கூறலா்ம் . வளர்ந்து வரும் நாடுகள் , வளரும் நாடுகள் , வல்லரசு நாடுகளிலும் ஒவ்வாமை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன . ஒவ்வாமை தொடர்பாக நான் மேலே கூறியவை மிகச்சில அறிகுறிகள்தான் . இதையும் தாண்டி மலக்கட்டு , வயிற்றுப்போக்கு , குழந்தைகளின் அதீத செயல்பாடு , மைக்ரேன் தலைவலி , மன அழுத்தம் , ஆஸ்துமா , கண்களில் நீர் கொட்டுவது , கண் எரிச்சல் , ரைனிடிஸ் ( மூக்கில் ஏற்படும் பாதிப்பு ), உடல் சோர்வு , தோலில் அரிப்பு , எடை குறைவு ஆகியவை ஏற்படும் . பொதுவான அலர்ஜியால் ஆஸ்துமா , கண் , மூக்கு எரிச்சல் , தோல் அரிப்பு , உணவு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன . இதற்க...

மாடுகளை வதைக்கின்றனவா பால் பண்ணைகள்? - வலுப்படும் எதிர்ப்புகள்

படம்
  உலகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளுக்கு எதிராக பல்வேறு விலங்கு நல அமைப்புகள் போராடி வருகின்றன.  உலகநாடுகளில் இயங்கி வரும் பால் பண்ணைகள் மூலம்தான் பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்க்ரீம், யோகர்ட், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் ஆகிய பால் பொருட்கள் கிடைக்கின்றன. மிதமிஞ்சிய பாலை பால் பௌடராக மாற்றி உலகச்சந்தையில் பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றன.  பால் பண்ணைகளில் உற்பத்தி குறையாமலிருக்க பசுக்கள் செயற்கை முறையில் சினையூட்டம் பெற்று கன்றுகளை ஈனுகின்றன. பசுக்களின் பராமரிப்பு, இயற்கையான முறை அல்லாமல் செயற்கையான சினையூட்டப்படுவது, கிடாரிக்கன்றுகளை வைத்துக்கொண்டு கிடாய்களை இறைச்சிக்கு விற்றுவிடுவது ஆகியவற்றுக்கு எதிராக விலங்குநல ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  அமெரிக்காவில் பால்துறை சந்தை தோராயமாக 60 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு  மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையும் பெரியது. இருபது ஆண்டுகாலம் வாழும் பசு, ஐந்து ஆண்டுகளிலேயே பால் வளத்தை இழந்து, இறைச்சிக்காக விற்கப்பட்டுவிடுகின்றன. பால் வளமின்றி வளர்ப்பது விவசாயிகளுக்கு சுமை என்று கூறப்படுகிறது. ’’இங்கு பெறப்படும...

பருவம் தாண்டியும் பால் குடிக்கும் மனிதர்கள்!

படம்
  பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.  பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும்.  பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது.  1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்...

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கம...