நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!
நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை! அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும். இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய...