மனைவியை முன்னாள் காதலனுக்கு விட்டுத்தர முயலும் கணவன்!
தில் பசந்த் வெப் சீரிஸ் இன்ஃபினிட்டம் இயக்கம் பிரசாத் பெஹ்ரா நடிப்பு பிரசாத் பெஹ்ரா, எப்சிபா எப்சிபா, ஒரு இளைஞனைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுக்கோ வேலை இல்லை. வேலை தேடிக்கொண்டு வந்தால், என் அப்பாவிடம் பேசலாம் என்று கூறுகிறாள். ஆனால் எதிர்பார்த்தது போல வேலை கிடைக்கவில்லை. அதேசமயம், எப்சிபாவுக்கு, சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஒருவரோடு மணமாகிறது. எப்சிபாவுக்கு அதில் விருப்பமில்லை. இருந்தாலும் அவளது அப்பாவுக்கு வேலை இல்லாத காதலனுக்கு மணம் செய்து தர விருப்பமில்லை. இப்படியான சூழ்நிலையில், அப்பாவியான அரசு ஊழியன் வாழ்க்கை என்னவானது, எப்சிபாவின் காதல் திருமணத்திற்குப் பிறகு என்னவானது என்பதை தொடர் விவரிக்கிறது யூட்யூபில் ஒருமணிநேரமாக தொடர் மாற்றப்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிடலாம். பிரசாத், அப்பாவியான அரசு ஊழியராக நடித்துள்ளார். சாதிப்பற்று கொண்ட அதேநேரம் அவரது வேலையில் நியாயமான ஆள். ஆபீசுக்கு வேலையாக வருபவர்களிடம் கூட பெண் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் அளவுக்கு, திருமணத்திற்கு துடிப்பவர். அப்படி இருப்பவருக்கு எப்சிபா மணமுடித்து வைக...