மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?
அமெரிக்காவின்
கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய்.
இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர்
செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல
தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அவர் பார்பரா
என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும்
கணவன் மனைவி என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும்
யாரும் மனதில் நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள்.
ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில்
நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப்
பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அருகிலேயே
கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர்
2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு
இருக்க கேசியும், அவரது பள்ளி கால நண்பர் காலெப்
கில்லெரியும் இறந்து போனார்கள்.
சம்பவ இடத்தில்
இருந்த பார்பரா, காலெப்பின் மனைவி கார்லி, கேசியின் தோழர் சக், அவரது மனைவி அலிஷா என
நால்வரும் நான்கு நாட்கள் காவல்நிலையத்தில் வைத்திருந்து விசாரித்துவிட்டு விடுதலை
செய்யப்பட்டனர்.
மர்மமாக இறந்துபோன
கேசி, காலெப்பின் உடலை அங்குலியாவிலேயே எரித்துவிட்டனர். இதற்கு என்ன காரணம் என கேசியின்
சகோதரி டெபனே தனி விசாரணை அதிகாரி வைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறார். பார்பரா கேசி
இறந்துபோனது பற்றி பேச மறுப்பதோடு, கணவரின் காப்பீடு பணத்தையும் பெற்றுவிட்டார். கணவரின்
மரணம் பற்றி பேசுபவர்களை எச்சரித்துவிட்டு நலமோடு வாழ்கிறார்.
காலெப் தனது
மனைவி கார்லியை கூட்டிக்கொண்டு அங்குலியாவிற்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, அவருடைய நண்பர் அழைத்திருக்கிறார். உல்லாச சுற்றுலா போல சென்றுவிட்டு புத்தாண்டு
கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரலாம் என நினைத்தார். அடுத்து, மனைவி கார்லியின் மனநிலைக்கு
ஓய்வு எடுக்க ஓரிடம் தேவைப்பட்டது. அது கடற்கரை என்பதால் அங்குலியா பொருத்தமாகவே பட்டது.
டிசம்பர்
31 அன்று நள்ளிரவில் நண்பர்கள் கேசி, காலெப் என இருவரும் பருகிய மதுவில் இருந்த விஷத்ததால்
இறந்துபோனார்கள். காலெப்பின் உடலில் அவரது கழுத்தை நெரித்த அடையாளங்கள் இருந்தன. கேசி,
விஷத்ததால் இதயம் நின்றுபோய் இருந்தது. கூடவே அவருக்கு வலிப்பு வந்ததோடு, நுரையீரலும்
பாதிக்கப்பட்டு இருந்தது. மரண சான்றிதழில் இதெல்லாம் சந்தேகமான விஷயங்கள்.
மெத்திலீன்டையாக்சி
ஆம்பீட்டமைன் என்ற வேதிப்பொருள் மதுவில் இருந்தது.
இதை எம்டிஏ, சாலி என குறிப்பிடுகிறார்கள். கூடவே கோகைனும் மதுவில் இருந்தது கண்டறியப்பட்டது.
கேசி, காலெப் என இருவருமே போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள் அல்ல என்பது காவல்துறை
விசாரணையில் தெரிய வந்தது.
நள்ளிரவில் கேசியின் நண்பரின் மனைவி அலிசா சக், காவல்துறைக்கு
அழைக்கும்போது காலெப் உயிருக்கு போராடிக்கொண்டிருந்திருக்கிறார். கேசிக்கு வலிப்பு
கண்டிருக்கிறது. ஆனால் காவல்துறை வந்து சம்பவ இடத்தை பார்த்தபோது காலெப் ஏற்கெனவே இறந்துபோயிருந்தார்.
கேசியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்றாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
ஐந்தாண்டுகள்
ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. பார்பரா, கார்லி, கேசியின் இன்னொரு
நண்பர் சக், அவரது மனைவி அலிஷா ஆகியோர் தங்களுக்குத்
தெரிந்த முழுமையான உண்மையை கூறவில்லை என்றே கேசியின் சகோதரி தரப்பில் குரல் எழுகிறது.
பார்பரா ஒருமுறை கேசியின் அம்மாவை சந்திக்க
வந்தவர், கேசியின் இறப்பு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தாதீர்கள் என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
கூடவந்த கார்லி, கேசியின் நண்பர், அவரது மனைவி ஆகியோர் ஒருவார்த்தையும் பேசாமல் அமைதியாக
தலை தாழ்த்தியபடியே இருந்துவிட்டு எழுந்து சென்றிருக்கிறார்கள்.
அங்குலியா
காவல்துறை தரப்பு, நாங்கள் பாதிக்கப்பட்ட பார்பரா, அவரது தோழி கார்லி ஆகியோருக்கு வழக்கு
தொடர்பாக தொடர்புகொண்டு தகவல்களை தர முயன்றோம். ஆனால், அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்கவில்லை
என்று கூறிவிட்டனர். கேசியின் சகோதரி, தனி விசாரணை அதிகாரி வார்டை நியமித்து அவருக்கு
கட்டணம் தருவதற்கான முயற்சியில் பார்பரா, கார்லி ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். ஆனால்
அவர்கள் இந்த முயற்சியை வரவேற்கவில்லை. ஆதரவு தர மறுத்துவிட்டனர்.
பார்பராவுக்கு
அவரையும், சக் என்ற கேசியின் நண்பரையும் காவல்துறை கொலைகாரர்களாக நினைத்து வழக்கு பதிந்ததது
என கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மையல்ல. சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த அங்குலியா
காவல்துறை அவர்களை பின்னர் விடுவித்துவிட்டது.
2010-2014
காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கேசி, தனது
திருமண வாழ்க்கை பற்றி நல்லவிதமான அபிப்ராயத்தை அவரது முகவரான கிரிஸ் மான்ட்கோமெரியிடம்
கூறவில்லை. தனியாக வாழ்ந்த நடிகர் என்பதாகவே பிறரிடம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.
ஏன் தனது திருமண வாழ்க்கை பற்றி பிறரிடம் பொய் கூற வேண்டும் என்பது அவருடைய மனதிற்கே
வெளிச்சம்.
சாண்ட்ரா
சோரிராஜ் வெஸ்ட்ஃபால், ஜெஃப் ட்ரூட்ஸ்டெல்
பீப்புள்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக