மக்கள்தொகை பெருகிய உலக நாடுகளின் நகரங்கள்!

 






 



அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள்

டோக்கியோ

ஜப்பான்

37.34 மில்லியன்

நாட்டின் முக்கியமான பொருளாதார அரசியல் தலைநகரம். பிறப்பு சதவீதம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் என்ற அந்தஸ்தை 2030இல் இழக்க வாய்ப்புள்ளது.

டெல்லி

இந்தியா

31.18 மில்லியன்

முகலாயர்களின் கட்டுமானங்களைக் கொண்ட பழைய நகரம்.  பெயர்களை மாற்றி வைத்தாலும் வரலாற்றை அழிக்க முடியாது அல்லவா?  தொன்மைக் காலத்தில் இருந்தே அரசின் அதிகாரத் தலைநகரம்.

ஷாங்காய்

சீனா

27.80 மில்லியன்

சீனாவின் வணிகம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் இந்த நகரில்தான் நடைபெறுகின்றன. விண் முட்டும் கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள் என கட்டுமானங்களுக்கு, வணிகத்திற்கு பெயர் பெற்ற நகரம்.

சாவோ பாலோ

பிரேசில்

22.24 மில்லியன்

புனிதர் பாலின் பெயர் வைக்கப்பட்ட நகரம். இங்கு 111 இனக்குழுக்கள் வசிக்கின்றனர்.

மெக்சிகோ சிட்டி

மெக்சிகோ

21.92 மில்லியன்

சியரா மாட்ரே மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள நகரம்.  கடலுக்கு மேலே 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது.  

டாக்கா

வங்கதேசம்

21.74 மில்லியன்

கங்கை ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள நகரம். மக்கள் தொகை பெருக்கம் கொண்ட நகரம். ஆறுகள் அதிகம் பாயும் பகுதியாக உள்ளது. முன்னணி ஆடை நிறுவனங்களுக்கு குறைந்த கூலியில் வேலை செய்து கொடுக்கும் நிறுவனங்களும் தொழிலாளர்களும் உள்ளனர்.

அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்