உண்மையைத் தேடுவதே இளைஞர்களின் முதல்பணி - ஜே கிருஷ்ணமூர்த்தி

 







ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி

மனிதர்கள் செய்யும் பணியில் இறுதியில் எஞ்சுவது அழிவும், அழிவும், விரக்தியும்தான். இதற்கு எதிரே சொகுசான பொருட்களும், கொடூர வறுமையும் நோயும், பட்டினியும் உள்ளன.  இதனோடு குளிர்பதனப்பெட்டியும், ஜெட் விமானங்களும்  இருக்கின்றன. இவை எல்லாமே மனிதர்கள் உருவாக்கியவைதான். நம்மால் உருவாக்க முடிந்தது இதைத்தானா, உண்மையில் மனிதர்களால்  செய்ய முடிந்த எந்திரங்கள் எவை?  துணி துவைக்கும் எந்திரங்கள், பாலங்கள், விடுதிகள் என மனிதர்கள் உருவாக்கிய பலவும் வேறுவேறு பொருட்களைக் கொண்டவை. மனிதர்கள் உண்மையாக உருவாக்கியது எதுவென தெரியாதவர்களுக்கு, அதில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்யமுடியாது.

மனிதர்களின் உண்மையான பணி, உருவாக்கம் என்பது என்ன? உண்மையைத் தேடுவதும், கடவுளைக் கண்டடைவதும்தான் என்று கூறலாம். இந்த மூடிய செயல்பாடுகளில் அன்பு தட்டுப்படுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்ளும் அன்பே புதிய உலகை உருவாக்குகிறது.

திங் ஆன் திஸ் திங்க்ஸ்

எது உண்மை, கடவுள் யார் என்பதைத் தேடுவது உண்மையான தேடல். பிற விஷயங்கள் எல்லாம் இதற்கு பின்னே வருவதுதான். நீரில் ஒரு கல்லை எறிந்தால் அது அதில் வட்டவடிவத்தை உருவாக்குகிறது. இப்படி உருவாகும் சலனம் போன்றே சமூகத்தின் பிரதிபலிப்புகள் உள்ளன. மகிழ்ச்சி, கடவுள், உண்மை ஆகியவற்றை மனிதர்கள் தேடி அடைய முயல்கிறார்கள். ஆனால் அவர்களின் மனதில் பயம், அச்சுறுத்தல் இருக்கும் வரை அதை கண்டறிய முடியாது. நீங்கள் இளைஞராக இருப்பது இங்கே முக்கியமாகிறது. அப்போது உலகத்தின் நெறி, சமூகத்தின் விதிகள், பெற்றோரின் கண்டிப்பு ஏதும் ஒருவரைக் கட்டுப்படுத்தாது. அந்த நேரத்தில் நீங்கள் உண்மையைத் தேடி அடையலாம். இப்படி இளமையில் கடவுள், உண்மையைத் தேடுபவர்களே புதிய கலாசாரத்தை , புதிய குடிமைச் சமூகத்தை உருவாக்குகிறார்கள்.

‘’’’

உண்மையான ஆன்மிகவாதி, சீர்திருத்தங்களைப் பற்றி சமூக வரிசை மாற்றங்களை  மாற்றியமைப்பது பற்றி அக்கறை கொள்ள மாட்டார். அவர் உண்மையைத் தேடிக்கொண்டிருப்பார். அதன் பாதையில்தான் சமூகம் தனது மாற்றங்களை அடைகிறது. இந்த இடத்தில் ஒருவருக்கு கிடைக்கும் சரியான கல்வி அவருக்கு கடவுள், உண்மையைத் தேட உதவுகிறது. சமூகத்தின் விதிகளுக்கு ஏற்றபடி ஒருவரை பொருந்தச்செய்வதில்லை.

தி ரியல் கிரிசஸ்

பின்டிரெஸ்ட்  

கருத்துகள்