தெரிஞ்சுக்கோ - தவளைகள்
தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ
ஆஸ்திரேலியன்
ஸ்ட்ரைப்டு ராக்கெட் என்ற தவளை தனது உடல் நீளத்தை
விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது.
கிரேட் கிரெஸ்டட்
நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது.
ஆப்பிரிக்கன்
கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ.
இந்தியாவில்
வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக
உறங்குகிறது. மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு
மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.
கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின்
மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக்
கொல்லலாம்.
நீர்நில வாழ்விகளில்
மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
-அவர் வேர்ல்ட்
இன் நம்பர்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக