தெரிஞ்சுக்கோ - மலம்

 








பீயுக்கும் ஈயுக்கும் என்னலே ஃபிரெண்ட்ஷிப்பு?  என ஓரம்போ படத்தில்  ஜான்விஜய் கேட்பார். காரண காரிய சமகால நட்பை, அந்தளவு கேவலமாக  கொச்சையாக ஆனால் மனதிற்கு உண்மையாக யாரும் சுட்டிக்காட்டி சொல்ல முடியாது. அதை விடுங்கள். மலம் என்றாலும் அதிலும் விஷயம் இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் மலத்தில் பல்வேறு கிருமிகள், தேவையில்லாத வேதிப்பொருட்கள் இருக்கும். அவை வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பசு ஒருநாளில் சுரக்கும் எச்சிலின் அளவு 98- 190 லிட்டர்.

மனிதர்கள் தம் ஆயுளில் வெளியிடும் அபான வாயுவின் அளவை வைத்து இரண்டாயிரம் பலூன்களை நிரப்பி வானில் பறக்க விடலாம். பலூன் வெடித்தால் என்னாகும் என்ற கேள்வியை த.வி.வெங்கடேஷ்வரனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

அபானவாயு, ஏப்பம், மலம் ஆகியவற்றை பண்ணை விலங்குகளான பசு, பன்றி, ஆடு மற்றும பிற விலங்குகள் வெளியிடுகின்றன. இதனால் உலகளவில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுவின் அளவு, 14.5 சதவீதம் ஆகும்.

ஜெயன்ட் பாண்டா, ஒருநாளுக்கு நாற்பது முறை மலம் கழிக்கிறது.

யானை தினசரி பதினைந்து முறை சாணத்தை வெளியேற்றுகிறது. இந்த வகையில் நூறு கிலோ சாணம் வெளித்தள்ளப்படுகிறது.

மனிதர்களின் மலத்தில் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்( 250) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களில் மலத்தில் 75 சதவீதம் இருப்பது நீர்தான்.

மனிதர்களின் மலத்தில் உள்ள ஆற்றல், 210 கலோரி. இதை வைத்து 24 போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம்.

அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் நிலவின் பல்வேறு பகுதிகளில் 96 பைகளை விட்டுவந்தனர். அதில் அவர்கள் கழித்த மலம் நிரப்பப்பட்டிருந்தது.

மனிதர்கள் கழிக்கும் சிறுநீரில், 3 ஆயிரம் வேதிப்பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

-அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

தொகுப்பு - மன்னார்சாமி

pinterest

கருத்துகள்