தெரிஞ்சுக்கோ - விளையாட்டு, நூல் வாசிப்பு

 








தெரிஞ்சுக்கோ – விளையாட்டு

 

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் எடை 2.7 கிராம். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளில் மிக இலகுவான எடை கொண்ட பந்து இதுவே.

ஸ்நூக்கர் விளையாட்டில் எட்டு நிறங்களில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெள்ளை நிறப்பந்தும் உள்ளடங்கும்.

குறைந்த தொலைவிலான ஸ்கேட்டிங் பந்தயங்களில், விளையாட்டு வீரர்கள் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில இயங்குகிறார்கள்.

1981-1986 காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்ற  ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், 555 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற சோதனையை நடத்தினார்.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பயன்படுத்தும் பலகையின் அகலம் பத்து செ.மீ.

1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டி பதினொரு மணி நேரம், நாற்பது நிமிடங்களுக்கு நடைபெற்றது. 

பாட்மின்டன் போட்டியில் பயன்படுத்தும் பந்து, பதினாறு வாத்துகளின் இறகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதன் எடை 5 கிராம்.

 

நூல்

இந்திய எழுத்தாளர் விக்ராந்த் மகாஜன் ஒரே முறையில் தனது “யெஸ் தேங்க்யூ யுனிவர்ஸ்” என்ற நூலின் 6,904  பிரதிகள் கையெழுத்திட்டு ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

ஜப்பபானின் டோக்கியோவில் உள்ள  மோரியோகா ஷோடென்  என்ற புத்தக கடை, வாரத்திற்கு ஒரு தலைப்பு கொண்ட நூலை மட்டுமே பல்வேறு பிரதிகளாக விற்று வருகின்றனர்.

1817ஆம் ஆண்டு மேரி ஷெல்லி “பிராங்கன்ஸ்டைன்” என்ற அறிவியல் நாவலை எழுதி முடித்தார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பதுதான்.

1901ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் எழுத்தாளர் பீட்ரிக்ஸ் பாட்டர், தனது “தி டேல் ஆஃப் பீட்டர் ராபிட்” நூலை 250 பிரதிகள் மட்டுமே அச்சிட்டு விற்றார். ஆனால் பின்னாளில் இந்த நூல் பிரதிகள் விற்பனை 45 கோடியாக அதிகரித்து சாதனை படைத்தது.

எத்தியோப்பியாவில் 33 கிராமங்களுக்கு, 21 ஒட்டகங்கள் மூலம் இருநூறு நூல்கள் கொண்டு செல்லப்பட்டு குழந்தைகள் படிக்க உதவி செய்யப்பட்டது.

அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

கருத்துகள்