இடுகைகள்

உலகம்-அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகப்போரின் தளபதி!

படம்
வணிகப்போரின் தளபதி ! " நாங்கள் வணிகப்போரை விரும்பவில்லை ; ஆனால் அதை எதிர்கொள்வதிலும் எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை " என்று தில்லாக சொன்னவர் சீனாவிற்கான அமெரிக்க தூதர் க்யூ தியான்கை . ஆங்கிலத்தில் சரளமாக பேசும் தியான்கை போட்டிக்கு மட்டுமல்ல போருக்கும் சளைத்தவரல்ல . சீனா குளோபல் டிவிக்கு அளித்த பேட்டியில் எதிராளி கடுமையாக இருந்தால் போட்டியின் இறுதிவரை நாமும் அப்படியே இருப்போம் என்று பேசிய மன உறுதிக்கு சொந்தக்காரர் . 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை 375 பில்லியன் டாலர்கள் . தன் தேர்தல் உரையில் மோசமான அரசியலால் சீனா வியாபாரத்தில் முன்னணியிலுள்ளது என்று பேசிய ட்ரம்பை , அதிபர் ஜின்பிங் சந்தித்ததிலும் பின்னாலுள்ளது தியான்கையின் சாதுரியமே . 1979 ஆம் ஆண்டில் அமெரிக்க - சீனாவுடன் ராஜரீய உறவு தொடங்கியதிலிருந்து அதிக காலம் வெளிநாட்டு தூதராக பதவி வகித்தவர் தியான்கை மட்டுமே . ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமான உறவைப் பேணிவரும் தியான்கை விரைவில் பணி ஓய்வு பெறும்நிலையில் அடுத்த தூதரை சீனா தேர்ந்தெடுக்கும் அவசியமும் நெருக்கடியும் உருவாகியுள்ளது .   

மரியில்லே ஃபிரான்கோ கொல்லப்பட்டது ஏன்?

படம்
மனித உரிமைப்போராளி படுகொலை ! பிரேசிலைச் சேர்ந்த அரசியல் தலைவரான மரியில்லே ஃபிரான்கோ மற்றும் அவரது கார் ஓட்டுநரான ஆண்டர்சன் பெட்ரோ ஆகிய இருவரும் கறுப்பின பெண்களுக்கான விழாவில் பங்கேற்றபோது சுட்டுக்கொல்லப்பட்டனர் . மனித உரிமைக்காக போராடிய ஃபிரான்கோ கொல்லப்பட்டது பிரேசில் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது . 38 வயதான ஃபிரான்கோ மரே ஃபவேலா என்ற குடிசைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவர் . ரியோ ஜெனிரோவின் 51 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில் இடம்பெற்ற ஒரே கருப்பின பெண்ணான ஃபிரான்கோ ,  ஆப்பிரிக்க பிரேசிலியர்கள் , ஏழைகள் , மாற்று பாலினத்தவர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் . அதிபர் மைக்கேல் டெமர் , ராணுவம் , காவல்துறை ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்தார் ஃபிரான்கோ . இவரின் இறப்பிற்கு பிரேசில் நாடு கடந்து நியூயார்க் , பாரிஸ் , பெர்லின் உள்ளிட 54 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .