வணிகப்போரின் தளபதி!
வணிகப்போரின் தளபதி!
"நாங்கள்
வணிகப்போரை விரும்பவில்லை; ஆனால் அதை எதிர்கொள்வதிலும் எங்களுக்கு
எவ்வித பயமும் இல்லை" என்று தில்லாக சொன்னவர் சீனாவிற்கான
அமெரிக்க தூதர் க்யூ தியான்கை. ஆங்கிலத்தில் சரளமாக பேசும் தியான்கை
போட்டிக்கு மட்டுமல்ல போருக்கும் சளைத்தவரல்ல. சீனா குளோபல் டிவிக்கு
அளித்த பேட்டியில் எதிராளி கடுமையாக இருந்தால் போட்டியின் இறுதிவரை நாமும் அப்படியே
இருப்போம் என்று பேசிய மன உறுதிக்கு சொந்தக்காரர்.
2017 ஆம்
ஆண்டு அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை 375 பில்லியன் டாலர்கள்.
தன் தேர்தல் உரையில் மோசமான அரசியலால் சீனா வியாபாரத்தில் முன்னணியிலுள்ளது
என்று பேசிய ட்ரம்பை, அதிபர் ஜின்பிங் சந்தித்ததிலும் பின்னாலுள்ளது
தியான்கையின் சாதுரியமே. 1979 ஆம் ஆண்டில் அமெரிக்க -
சீனாவுடன் ராஜரீய உறவு தொடங்கியதிலிருந்து அதிக காலம் வெளிநாட்டு தூதராக
பதவி வகித்தவர் தியான்கை மட்டுமே. ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணக்கமான
உறவைப் பேணிவரும் தியான்கை விரைவில் பணி ஓய்வு பெறும்நிலையில் அடுத்த தூதரை சீனா தேர்ந்தெடுக்கும்
அவசியமும் நெருக்கடியும் உருவாகியுள்ளது.