சிறையில் வெளியான கைதிகளுக்கான பத்திரிகை!



Image result for prison mirror


ஜெயில் பத்திரிகை!



ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்ற குற்றவாளிகளால் தொடங்கப்பட்டது பிரிசன் மிரர் என்ற பத்திரிகை. அமெரிக்கா மட்டுமல்லாது மூன்று வெளிநாடுகளுக்கும் சென்றது இதன் சாதனை. சிறையில் 1,200 பிரதிகளும், சிறைக்கு வெளியே 2 ஆயிரம் பிரதிகளும் விற்கப்பட்டன. ஆண்டு சந்தா 5 டாலர், ஓராண்டு சந்தா 1 டாலர் விலையில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று பிரிசன் மிரர் வெளியானது.



1876 ஆம் ஆண்டு நார்த்ஃபீல்டு பகுதியிலுள்ள வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியில் தோற்ற ஜெஸ்ஸி ஜேம்ஸ், கோல்மன் யங்கர் மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் ஆகியோர் 50 டாலர் செலவில் நாளிதழை தொடங்கினர். டேப்லாய்டு வடிவ நாளிதழின் பதினாறு பக்கங்களுக்கும் கைதிகளே பொறுப்பு. 1985-86 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கா பீனல் பிரஸ் பிரிசன் மிரர் பத்திரிகைக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வார்டன்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிரிசன் மிரர் சிறைச்சாலை பற்றிய செய்திகள், கடிதங்கள் ஆகியவற்றை தாங்கி வெளியானது. தொடங்கிய காலத்திலிருந்தே கைதிகளின் குரலை, எழுத்தை வலுப்படுத்த உருவான பத்திரிகை என்ற லட்சியத்தை தி பிரிசன் மிரர் விட்டு கொடுக்காமல் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது.