முகர்ஜியா? கோவிந்தா?- இந்தியாவின் பிரசிடெண்ட் யாரு?





Image result for kavalan movie vadivelu comedy



பிட்ஸ்!

காதல் பகடி!

அமெரிக்காவைச் சேர்ந்த லெவி, தன் பெண் தோழி அலிசன் பாரோனிடம் காதல் சொல்லி மணம் செய்ய சம்மதம் கேட்டார். ஆனால் அலிசனின் அப்பா, நோ சொல்லு என்ற போர்டை பெண்ணுக்கு தூக்கி காட்டி காமெடி செய்ததுதான் இணையத்தில் சூப்பர் வைரல். இருதரப்பிலும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் ஜோடிகளுக்கு விரைவில் டும்டும்டும் கொட்டவிருக்கிறது.

யார் சார் நீங்க?

பஞ்சாப்பின் லூதியானாவில் மெழுகுச்சிலைகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள 52 சிலைகளில் பலரும் செலிபிரிட்டிகள்தான். ஆனால் யார் என்றுதான் விசிட்டர் பலருக்கும் குழப்பமே. மோடி, டெண்டுல்கர், கலாம், அன்னை தெரசா ஆகியோர் உள்ளனர் என ஓனர் சொன்னாலும் நம்ப முடியாதபடி மெழுகு சிலைகள் டிசைன் செய்யப்பட்டுள்ளன என்பதுதான் விநோதம்.

முகர்ஜியா? கோவிந்தா?

அண்மையில் தனது பாகி-2 படத்திற்கான புரமோஷனில் ஹீரோ டைகரிடம் குடியரசுத்தலைவர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. பீதியானவர், முகர்ஜியா? மெல்லிய குரலில் பதில் சொல்லி தன் படத்தைவிட வைரலானார். நெட்டிசன்கள் தேசபக்தி பட ஹீரோவுக்கு குடியரசுத்தலைவர் பெயர் கூட தெரியவில்லையே என டைகரை தாளித்து வருகின்றனர்

பெண்களுக்கு பெரும் பொறுப்பு!

மும்பை போலீசார் இந்தியாவிலேயே முதல்முறையாக எட்டு பெண் காவலர்களை ஸ்டேஷன் இன்சார்ஜாக நியமித்து சாதித்துள்ளனர். இத்தகவல் மும்பை போலீசாரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து போலீசாருக்கு மக்களின் வாழ்த்து மழை இடைவிடாமல் பொழிந்து வருகிறது.

காருக்கு வழிகாட்டி!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டிரைவர், டெக்னாலஜியை மட்டுமே நம்புபவர். சாலையைப் பார்க்காமல் ஜிபிஎஸ் காட்டிய வழியை நம்பி காரை எங்கு கொண்டு சென்றார் தெரியுமா? மார்க்கெட் தெருவுக்கு செல்லும் படிக்கட்டுகளில். வண்டியை நிறுத்த இடம்தேடியபோதுதான் இந்த விபரீதம். "என் மேல் எந்த தவறுமில்லை. ஆப் சொன்னபடி வண்டி ஓட்டினேன்" என்று சொல்லிவிட்டார் டிரைவர்.