எலக்ட்ரிக் காருக்கு மாறுங்க!
மின்சார காருக்கு
அரசு உதவி!
பெட்ரோல்- டீசல்
கார்களின் சூழல்பாதிப்பைக் குறைக்க இந்திய அரசு எலக்ட்ரிக் கார் தொழில்துறைக்கு
2.5 லட்சம் கோடி ரூபாயை அளிக்கவிருக்கிறது. இதில்
இருசக்கர மின்வாகனத்தை ஒருவர் வாங்கினால் அவருக்கு அரசு மானியமாக 30 ஆயிரம் அளிக்கிறது. பஸ் மற்றும் டாக்சிகளுக்கு
1.5-2.5 லட்சம் வரை அரசின் மானிய உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனரகபோக்குவரத்துறை(DHI) சார்பில்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு 9 கி.மீ தூரத்திலும் ஒரு மின்வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமையவேண்டும்
என கூறப்பட்டுள்ளது. டெல்லி- ஜெய்ப்பூர்,
டெல்லி - சண்டிகர், சென்னை
- பெங்களூரு, மும்பை - புனே
ஆகிய இடங்களில் முதல்கட்டமாக சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
"அரசு மின்வாகனங்களுக்கு அளிக்கும் நிதி என்பது இத்துறையில்
0.5%தான். கார்பன் வாயுக்களை குறைக்க அரசு பொதுப்போக்குவரத்தில்
கவனம் செலுத்தவேண்டும்" என்கிறார் எலக்ட்ரிக்துறை ஆலோசகர்
ஒருவர். மின் மற்றும் கலப்பு வாகனங்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக
9 ஆயிரத்து 400 கோடி ரூபாயை அளிக்கவிருக்கிறது.