லண்டன் கொலைகள்!



Image result for knife crimes in the uk



லண்டன் கொலைகள்!

2018 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து லண்டனில் இதுவரை 50 கொலைகள் நிகழ்ந்துள்ளன. பெரும்பாலும் கத்திக்குத்துக்கள் என்பதுதான் ஷாக். பிப்ரவரி, மார்ச்சில் நிகழ்ந்த கொலைகளின் அளவு அதிகம்.

2015 ஆம் ஆண்டு 25 சதவிகிதமாக குறைந்திருந்த கத்திக்குத்து சம்பவங்கள் தற்போது மீண்டும் யூடர்ன் அடித்து திரும்பியுள்ளன.கடந்த ஏப்ரல் அன்று இச்சம்பவங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் பதாதைகள் ஏந்தி போராடினர். கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து காவல்துறையில் 20 ஆயிரம் பேரை குறைத்துள்ளது க்ரைம்ரேட் கூடுவதற்கு முக்கிய காரணம். லண்டன் மேயர் சாதிக் கான் இது சரியான முடிவல்ல என்ற அரசின் நடவடிக்கைக்கு எதிராக பேசியுள்ளார். கத்திக்குத்து க்ரைம்களில் பைக்கில் வரும் அனாமதேய குழுக்கள் ஈடுபடுகின்றன என்று தெரிந்தாலும் இன்னும் போலீசினால் குற்றவாளிகளை நெருங்கமுடியவில்லை என்பது பெரும் சோகம்.

லண்டன் காவல்துறை இக்க்ரைம்களை குறைக்கவென 300 போலீசாரை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. அரசு இவர்களுக்கென 57 மில்லியன் டாலர்களை ஒதுக்கி செயல்பட்டு வருகிறது.   


பிரபலமான இடுகைகள்