மூளையை கட்டிப்போடும் பைனரி சங்கிலி!
இளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்! மீள்வது எப்படி?
-ச.அன்பரசு
மனிதர்கள் விற்பனைக்கு!
யாரோ ஒருவர் மட்டுமல்ல;
ஜென் இசட் தலைமுறை முழுக்கவே இன்று ஸ்மார்ட்போனின் ஒளிர்திரையில் கவனம் குவித்து குனிந்த தலை நிமிராமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது.ஃபேஸ்புக்,
கூகுள், அமேஸான் ஆகியோரின் டேட்டா கொள்ளை பற்றி பேசுகிறோம்.
உண்மையில் மனிதர்களின் தகவல் மட்டுமல்ல;
மனிதர்களே இணையச்சந்தையில் விற்கப்படும் விளைபொருட்கள்தான். இணைய நிறுவனங்களின் வெற்றி மனிதர்களின் உளவியலை ஆழமாக தோண்டித்துருவி அறிவதில்தான் இருக்கிறது.
அனைத்து ஆப்களும் மனிதர்களின் உளவியலுக்கேற்றபடி உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, ஃபேஸ்புக், பின்ட்ரெஸ்ட், யூட்யூப் போன்றவற்றில் ஸ்குரோல் செய்து கீழிறங்கினால் வீடியோக்கள் முடிவற்று பெருகும். நாம் போர்வெல்லில் துளையிட்டு நீர் தேடுவதைப் போல வீடியோ தாகத்தில் தேடிக்கொண்டே சென்று நேரத்தை தொலைப்போம்.
உளவியலே மந்திரம்!
"இத்தொழில்நுட்பத்தை அடிப்பாகம் இல்லாத பாத்திரம் போல எனலாம்.
கம்ப்யூட்டர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தும் காட்சிகளைக் காண 20 ஆண்டுகள் போதும்" என்கிறார் ஸ்டோன்ஃபோர்டு உளவியல் ஆராய்ச்சியாளர் பி.ஜே.ஃபோக். முடிந்தவரை சிறுநீர், மலம் கழிக்க,
சாப்பிட செல்லாமல் ஒருவரை மெய்மறந்து உட்கார வைக்கவே சமூகவலைதளங்கள் பிரம்ம பிரயத்தனப்படுகின்றன. ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர், பின்ட்ரெஸ்ட் ஆகிய தளங்களின் பதிவுகள்,
பின்னூட்டங்கள், செய்திகள் ஆகியவை நம் கருத்து,
விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றன. அதோடு ஆப்பிள் முதலீட்டாளர்கள், அடிமைத்தனத்தை குறைக்கும் டிசைனில் ஆப்பிள் போனை வடிவமைக்க மாநாட்டில் வற்புறுத்தி குரல் எழுப்பியுள்ளதும், பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் பணியாளர்களின் இமெயில் பார்க்கும் நேரங்களை கட்டுப்படுத்துவதும் நாம் அலட்சியப்படுத்தக்கூடாத முன்முயற்சிகளில் சில.
மூளை யாருடைய சொத்து?
Bounless Mind Team |
பாராட்டு எனும் தூண்டில்!
"பாராட்டுக்கு ஏங்கித் தவித்து இணையத்தில் உலாவித் திரியும் இந்நிலைக்கு சர்ப்ரைஸ் அண்ட் டிலைட் என்று பெயர் என்கிறார் ப்ரௌன்.
நாட்டிலுள்ள 190 மருத்துவமனைகளோடு இணைந்து டெக் அடிமைத்தனத்திற்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இணையத்தில் நம் நேரம் செரிக்கப்படுவதை தடுக்க
Moment, Onward ஆகிய
ஆப்கள் சிறப்பாக உதவுகின்றன.
மனதை வளைக்கும் தந்திரம்!
நம் மனதை வளைக்க இன்ஸ்டன்ட்டாக சில பாராட்டுகளை, போனஸ் விஷயங்களை டெக் நிறுவனங்கள் வழங்குகின்றன. எப்படி அப்பரைசல், இன்க்ரிமெண்ட், போனஸ் ஒரு நிறுவனத்தின் மீது பற்றுதலை ஊழியருக்கு ஏற்படுத்துகிறதோ அதைப்போன்றதே இவையும்.
ஸ்நாப்சாட்டில் தொடர்ச்சியாக ஒருவாரம் சாட் செய்பவர்களின் பெயர்களுக்கு அருகில் நெருப்பு இமோஜி இடம்பெறும்.
நண்பர்களோடு ஒருநாள் சாட் செய்யாதபோது இவை மறைந்துவிடும். மேற்சொன்ன பார்முலாவுக்கு இதுவே சாம்பிள்.
சூதாட்ட கிளப்புகளில் வெளிப்புறத்தை காட்டும் ஜன்னல்களோ, கடிகாரங்களோ இருக்காது. அங்குள்ள மெஷின்களும் மூளையில் டோபமைன் சுரப்பை தூண்டுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும். Farmville சமூகவலைதள விளையாட்டில் பயனர்கள் குறிப்பிட்ட லெவலைத் தாண்டவும் பணம் கட்டவைக்கவும் தந்திர ஃபார்முலாக்களை கையாண்டு ஜெயித்திருக்கிறார்கள். "மக்களின் தூக்கம்தான் நம் நிறுவனத்திற்கு ஒரே சவால்"
என முதலீட்டாளர் மாநாட்டில் நெட்ஃபிளிக்ஸ் இயக்குநர் ரீட் ஹாஸ்டிங்ஸ் பேசியுள்ளது டெக் நிறுவனங்கள் செல்லும் அபாயதிசையைக் காட்டுகிறது.
லாபம் சமுதாயத்திற்கா? கம்பெனிக்கா?
இங்கிலாந்து அரசின் விதிமுறைக்கேற்ப உருவாகிய தனியார் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி, இன்றைய அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் லாப முன்னோடி. சம்பாதிப்பது, பங்குதாரர்களை திருப்திபடுத்துவது, அதேசமயம் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தின் பொருட்டு சமுதாயத்தின் கோபத்தையும் குறைப்பதற்கு சமூக செயல்பாடுகள் திறம்பட செயல்படுகின்றன.
மின்வெட்டு நேரத்தில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நினைவு கொள்வது, படிப்பு பற்றிய கேள்விகளை தந்தை கேட்பதை விட அவலம் வேறென்ன இருக்க முடியும்? எனவே மனிதர்களின் முகம்பார்த்து பேச எலக்ட்ரானிக் சாதனங்கள் தேவையில்லை.
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்கள்தான், அலுவலகத்தில் உள்ள பணியாளர்களைப் போலவே. அலுவலக வேலைக்கான நேரத்தை கணக்கிட்டு குடும்பத்திற்கான நேரத்தை அதிகரியுங்கள்.
இளமையிலேயே சமூகத்திற்கான பணிகளை நேரம் ஒதுக்கி செய்யுங்கள். ஓய்வுபெற்றபிறகு உடலை சமாளிக்கவே நேரம் போதாது. இதில் சுற்றுலா உள்ளிட்ட எந்த விஷயங்களையும் செய்ய நேரம் போதாது.
ஸ்மார்ட் இந்தியா!
அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் - 468 மில்லியன்(2021)
மொபைல்போன்களின் விகிதம்
- 775.5 மில்லியன்(2018),
730 மில்லியன்(2017)
நான்
அடிமை அல்ல!
Onward
ஆப்ஸ்களை பயன்படுத்தும் நேரம், கட்டுப்பாடு ஆகியவற்றை இதில் செட் செய்து அடிக்ஷனை ஒழிக்கலாம்.
Steplock
காலையில் வாக்கிங்,
எக்சர்சைஸ் என தினசரி கடமையைச் செய்தால் மட்டுமே போனிலுள்ள ஆப்ஸ்களை பயன்படுத்தலாம். இல்லையெனில் ஆப்ஸ்களுக்கு லாக் விழுந்துவிடும்.
Dinnertime plus
குழந்தைகளின் தூக்கம்,
சாப்பிட்டிற்கான நேரம், வீட்டுப்பாட நேரம் ஆகியவற்றை பெற்றோர் தம் போனிலிருந்து கண்காணிக்க உதவும் செயலி இது.
Forest
விர்ச்சுவலாக இந்த ஆப் மூலம் மரக்கன்றை நட்டு மரமாகும்வரை உழைக்கவேண்டும். பொறுமையிழந்து வேறு ஆப் மாறினால் மரம் பட்டுப்போய் இறந்துவிடும்.
Yondr
பழைய
ஆப் டெக்னிக்தான். ஸ்பெஷல் பவுச்சில் போனை வைத்துவிட்டால் ஸ்பெஷல் கீ
இன்றி போனை ஆன் செய்ய முடியாது.
பிரபலங்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பயன்படுத்தலாம்.