அதிக சத்தத்துடன் உச்சரிக்கப்படும் சொல் எது?

Image result for keep quiet


பிட்ஸ்!

கிரேக்கத்தின் புகழ்பெற்ற கவிஞரான ஹிப்போனாக்ஸ் கவிதையில் மட்டுமல்ல; பிறரைக் கிண்டல் செய்வதிலும் வல்லவர். தற்கொலை செய்துகொண்டவர்களை கிண்டல் செய்து பேசுவது இவரின் ஆயுள்கால ஹாபி.

தத்துவவியலாளர் கர்ல் கோடெல் பட்டினி கிடந்து உயிரிழந்தார். அப்போது அவர் மனைவி உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தார். தான் உண்ணும் உணவில் நச்சு கலக்கப்படுவதாக நினைத்து பயந்த கர்ல் சாப்பிடாமல் இறந்துபோனார்.

 வடகொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பிரிவினை நடந்து 73 ஆண்டுகளாகின்றன. தென்கொரியர்கள் பேசும் கொரிய மொழியை 45 சதவிகித வடகொரியர்களும், வடகொரியர்கள் பேசும் கொரிய மொழியை 1 சதவிகித தென் கொரியர்களும் புரிந்துகொள்கின்றனர்.

உலகிலேயே அதிக சத்தத்துடன் உச்சரிக்கப்படும் சொல், Quiet.

1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, பிபிசி முட்டாள் தின கொண்டாட்டத்திற்காக ப்ளூடோ ஜூபிடரின் பின்னாலிருந்து கடப்பதால் பூமியின் ஈர்ப்புவிசை குறைந்த இரவு 9.47 மணிக்கு மக்கள் பூமியிலிருந்து விண்வெளியில் மிதப்போம் என செய்தியைக்கூற, மக்கள் பலரும் பீதியில் உறைந்துபோய் Jovian-plutonian gravitational effect என்று அதனை அழைத்தனர்.