இடுகைகள்

ஓஹியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட