இடுகைகள்

நுண்ணோக்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி

லிஸ்டர் பற்றிய ஐந்து சுவாரசியமான விஷயங்கள்!

படம்
          லிஸ்டர் பற்றி ஐந்து விஷயங்கள் ! லிஸ்டரின் அப்பா , தனது பதினான்கு வயதில் பள்ளிக்கல்வியை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தார் . பின்னாளில் அவர் உருவாக்கிய நுண்ணோக்கி , அதன் லென்ஸ் ஆகியவற்றுக்காக பணமும் புகழும் பெற்றார் . லிஸ்டர் ஏராளமான நுட்பமான பல்வேறு கருவிகளை உருவாக்கினார் . அதனை புத்திசாலித்தனமாக காப்புரிமை பெற்று வைத்திருந்தார் . அறுவை சிகிச்சை செய்த புண்களை தைக்கும் ஊசி , காதில் நுழைந்த பொருட்களை எடுக்கும் கொக்கி போன்ற கருவி , வயிற்றிலுள்ள உறுப்புகளை ஆராயும் கருவி என சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் . லிஸ்டர் உருவாக்கிய ஆன்டிசெப்டிக் முறையை இங்கிலாந்தில் எதிர்த்தாலும் , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகள் அரவணைத்துக்கொண்டு பயன்படுத்தினர் . பிரான்ஸ் ப்ரஸ்ஸியா போர்க்காலங்களில் இம்முறையை பரவலாக பயன்படுத்தினர் . இன்று மருத்துவர்கள் நோயாளிகளை நம்பர் அல்லது கேஸ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள் . ஆனால் லிஸ்டர் இந்த ஏழை மனிதர் , இந்த நல்ல பெண்மணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நோயாளிகளை தேற்றியிருக்கிறார் . தனது மாணவர்களிடம் நோயாளிகளின் நோ்