இடுகைகள்

நிஷாந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிக கட்டண உயர்வால் பயணசேவை நிறுவனத்தை தொடங்கியவர்! - ஈஸி மை ட்ரிப் - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நிஷாந்த் பிட்டி, ஈஸி மை ட்ரிப் நிஷாந்த் பிட்டி, 36 இயக்குநர், ஈஸிமை ட்ரிப் ஈஸி மை ட்ரிப் என்ற பெயரைக் கேட்டதும் முடிவுசெய்திருப்பீர்கள். ஆகாய விமானத்தில் பயணம் செய்வதற்கான முன்பதிவை செய்துகொடுக்கும் நிறுவனம். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு வணிகம் செய்கிறார்கள். ஈஸி மை ட்ரிப், விமான நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு இயங்கி வருகிறது. 3,716 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 106 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, 1,800 கிளைகளை நடத்தி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த நிஷாந்த் தொடங்கிய நிறுவனம்தான் ஈஸி மை ட்ரிப். அவரது அப்பா, நிலக்கரியை தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். டெல்லியில் இருந்து குவகாத்திக்கு நிலக்கரியை க் கொண்டு செல்லவேண்டும்.   தந்தை வேலை காரணமாக குவகாத்திக்கு சென்றுவிட நிஷாந்தும் அங்கே செல்ல வேண்டிய நிலை. போகும்போது விமான டிக்கெட் விலை சல்லிசாக இருந்தது. ஆனால், திரும்பி வரும்போது நிலைமை அப்படியில்லை. டிக்கெட் விலை அதிகரித்து இருந்தது. நிஷாந்தின் முகவர், கு